ரோடுகளை ஆக்கிரமித்துள்ள பிளக்ஸ் பேனர்கள்: ஆட்சி மாறியும் காட்சிகள் மாறவில்லை
உடுமலை: உடுமலையில், பஸ் ஸ்டாண்ட் மற்றும் பிரதான ரோடுகளில், விதி மீறி அதிகளவு பிளக்ஸ் பேனர்கள் வைக்கப்படுவதால், விபத்துக்கள் அதிகரித்து வருகிறது.
உடுமலை நகரப்பகுதிகளில், ரோடு சந்திப்புகள், பஸ் ஸ்டாண்ட், வணிக வளாகங்கள் அதிகம் உள்ள பகுதி, பஸ் ஸ்டாப்கள் என அனைத்து பகுதிகளிலும், அரசியல் கட்சிகள், வணிக நிறுவனங்கள் சார்பில், நுாற்றுக்கணக்கான பேனர்கள் நிறுவப்பட்டுள்ளன.
பிரதான ரோடுகளான, பழநி ரோடு, பொள்ளாச்சி ரோடு, தாராபுரம் ரோடு, தளி ரோடு, திருப்பூர் ரோடு, ராஜேந்திரா ரோடு மற்றும் தளி ரோடு சந்திப்பு, பஸ் ஸ்டாண்ட், அனுஷம் ரோடு சந்திப்பு என அனைத்து இடங்களிலும், பிரமாண்ட பிளக்ஸ் பேனர்கள் அமைக்கப்பட்டு வருகிறது.
ஆட்சி மாறினாலும், வீதிமீறல் பிளக்ஸ் பேனர்கள் வைப்பதில், அரசியல் கட்சியினர் பாரபட்சமின்றி ஈடுபட்டு வருகின்றனர்.
பொது இடங்களில், பிளக்ஸ் பேனர்கள் வைக்கக்கூடாது என, அரசு மற்றும் உயர் நீதிமன்ற உத்தரவுகள் உள்ள நிலையிலும், விதி மீறி இவ்வாறு அமைக்கப்படும் பிளக்ஸ் பேனர்களால், கவனச்சிதறல், விபத்துக்கள் ஏற்பட்டு வருகிறது.
உடுமலை மற்றும் சுற்றுப்புற கிராமங்களில், பஸ் ஸ்டாண்ட், பஸ் ஸ்டாப் மற்றும் ரோடுகளை மறைத்து வைத்துள்ளதால், பொதுமக்கள் கடுமையாக பாதிக்கின்றனர்.
பல இடங்களில் மழைக்கும், காற்றுக்கும் தாங்காமல், வாகன ஓட்டுனர்கள் மீது விழுந்து விபத்துக்களையும் ஏற்படுத்தி வருகிறது.
எனவே, விதி மீறி வைக்கப்பட்டுள்ள பிளக்ஸ் பேனர்களை அகற்றவும், அவற்றை வைத்தவர்கள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்க, அதிகாரிகள் மற்றும் போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேலும்
-
'போர்வாள்' நாளிதழ் துவங்கினார் இபிஎஸ்!
-
வெளிநாடுகளில் இந்தியாவின் கவுரவத்தை உறுதி செய்யும் மோடி: சரத் பவார் பாராட்டு
-
மெலோனிக்கு 'மெலோடி'யை பரிசளித்த பிரதமர் மோடி; வைரலாகும் கலகலப்பு வீடியோ
-
அதிமுக எம்எல்ஏக்கள் அமைச்சரவையில் இடம்பெறமாட்டார்கள்; திருமா தகவல்
-
புதிய வாகனத்தை இயக்கிப் பார்த்து முதல்வர் விஜய் ஆய்வு
-
அமைச்சரவையில் இடம்; விசிக, முஸ்லிம் லீக்கிற்கு தவெக அழைப்பு