வீடு வீடாக குப்பை சேகரிப்பு: விபரம் கணக்கெடுப்பு

தேனி:தேனியில் தூய்மை பாரதம் திட்டத்தின் கீழ் நகராட்சி சார்பில் டெங்கு ஒழிப்பு பணியாளர்கள் மூலம் வீடு வீடாக சென்று குப்பை சேகரிப்பு குறித்து மக்களிடம் கருத்துகள் பெறப்பட்டு வருகிறது.

தேனி அல்லிநகரம் நகராட்சியில் மத்திய அரசின் தூய்மை பாரதம் திட்டத்தின் கீழ் டெங்கு தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. நகராட்சி பணியாளர்கள், டெங்கு ஒழிப்பு பணியாளர்கள் குடியிருப்புகளுக்கு சென்று தகவல்கள் சேகரித்து வருகின்றனர். வீடுகளில் வசிப்போரிடம் அலைபேசி எண்கள் பெற்று, பின்னர் அந்த எண்களுக்கு வரும் ஒ.டி.பி., எண்கள் பதிவு செய்கின்றனர்.

அதன்பின் குடியிருப்பவர்களிடம் முறையாக குப்பை அகற்ற பணியாளர்கள் வருகின்றனர்களா, எத்தனை நாள்களுக்கு ஒருமுறை குப்பை சேகரிக்கப்படுகிறது போன்ற விபரம் கேட்கின்றனர். மேலும் குடிநீர் விநியோகம், டெங்கு அல்லது காய்ச்சல் அறிகுறிகள் உள்ளனவா என்பதையும் கேட்டறிகின்றனர். கொசுவை ஒழிப்பில் சுற்றுப்புறங்களை சுத்தமாக வைத்திருக்க விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.

Advertisement