ஜாதி சான்றிதழ் வழங்கக்கோரி கஞ்சம் ரெட்டி சமூகத்தினர் மனு
கள்ளக்குறிச்சி: பனப்பாடி கிராமத்தில் கஞ்சம் ரெட்டி சமூகத்தைச் சேர்ந்த சிலர் ஜாதிச் சான்றிதழ் வழங்கக்கோரி கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.
திருக்கோவிலுார் தாலுகா, பனப்பாடி கிராமத்தைச் சேர்ந்தவர்கள் அளித்த மனு:
நாங்கள் இந்து மதம், கஞ்சம் ரெட்டி சமூகத்தைச் சேர்ந்தவர்கள். தமிழ்நாடு அரசின் பிற்படுத்தப்பட்டோர் பட்டியல் வரிசை எண் 50ல் கஞ்சம் ரெட்டி என்ற சமூகம் இடம் பெற்றுள்ளது.
ஆனால், எங்களுக்கு ஜாதிச் சான்றிதழ் வழங்கப்படாததால் உயர்கல்வி மற்றும் வேலை வாய்ப்புகளை பெறுவதில் சிரமமடைந்து வருகிறோம். கடந்த கல்வியாண்டில் பிளஸ் 2 பயின்று முடித்தவர்கள் உயர்கல்வியில் சேர ஜாதிச் சான்று தேவைப்படுகிறது. எனவே, கஞ்சம் ரெட்டி சமூகத்தைச் சேர்ந்தவர்களுக்கு ஜாதிச் சான்றிதழ் வழங்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
முதல்வர் அரியாசனத்தில் விஜயை அமர்த்திய இளைஞர் பட்டாளம் 'இளைஞர்களை கட்சியில் சேருங்கள்' என தி.மு.க., அ.தி.மு.க.,வில் போர்க்குரல்
-
10ம் வகுப்பு தேர்வு மாநகராட்சி பள்ளிகளில் 89 சதவீத தேர்ச்சி பெரம்பூர் பள்ளி மாணவி கிரத்தி மாயா ஸ்ரீ முதலிடம்
-
தரையில் கிடந்த முளைவிட்ட நெல்லை மூட்டை மேல் வைத்து எடுத்த புகைப்படமாம் வாணிபக்கழக அதிகாரி சொல்கிறார்
-
59 ஆண்டுக்குப்பின் அமைச்சரவையில் காங்.,
-
சென்னையில் அதிரடி ஒரே நாளில் 234 ரவுடிகள் கைது போதை பொருள் விற்ற கும்பலில் 101 பேர் கைது
-
அரசு துறைகளில் கோவில் நிதி முதலீடு எதிர்த்த வழக்கில் அரசு பதிலளிக்க உத்தரவு
Advertisement
Advertisement