கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ., பஸ் நிலையத்தில் ஆய்வு

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி அடுத்த ஏமப்பேர் எல்லையில் உள்ள புறநகர் பஸ்நிலையத்தில் தொகுதி எம்.எல்.ஏ., அருள்விக்னேஷ் ஆய்வு மேற்கொண்டார்.

பஸ் நிலைய இருக்கைகள், குடிநீர், கழிவறை, கழிவுநீர் கால்வாய், இரு சக்கர வாகன நிறுத்துமிடம் உட்பட பல்வேறு பகுதிகளை ஆய்வு செய்து பயணிகளிடம் குறைகளைக் கேட்டறிந்தார்.

கழிவறை சுத்தமாக இல்லாதது மற்றும் பீங்கான் உடைந்த நிலையில் இருந்தது குறித்து ஒப்பந்ததாரரிடம் கேட்டறிந்தார். தொடர்ந்து, உடைந்த நிலையில் இருக்கைகளை சரிசெய்தல், நடைபாதையில் உள்ள கடைகளை அகற்றுதல், சுத்தகரிக்கப்பட்ட குடிநீர் இயந்திரத்தை சீரமைப்பது, இரு சக்கர வாகன நிறுத்துமிடத்தில் ஷெட் அமைப்பது.

கண்காணிப்பு கேமிரா அமைத்தல், பாதுகாப்பு பணியில் ஈடுபடும் போலீசாருக்கென தனி அறை ஒதுக்குதல், கழிவுநீர் கால்வாய் வசதி ஏற்படுத்துதல், கடை ஷட்டர்களை சரிசெய்தல், வெஸ்டர்ன் மாடல் கழிப்பறையை சாதாரணமாக மாற்றுதல் என பல்வேறு பணிகளை உடனடியாக மேற்கொள்ளுமாறு நகராட்சி கமிஷ்னர் ரவிச்சந்திரனிடம் அறிவுறுத்தினார்.

த.வெ.க., மாவட்ட செயலாளர் பிரகாஷ், நகர செயலாளர் ராஜேஷ், ஒன்றிய செயலாளர்கள் வரதன், திலீப்குமார், தகவல் தொழில்நுட்ப அணி இணை அமைப்பாளர் அறிவுமணி, மாவட்ட பொருளாளர் ஜவகர், நகர இணைச் செயலாளர் அருண், நகர பொருளாளர் அருண்குமார் உட்பட நிர்வாகிகள் பலர் உடனிருந்தனர்.

Advertisement