மழைநீர் எதிர்பார்த்து கவுசிகா நதி தடுப்பணை

கோவில்பாளையம்: கோவில்பாளையம் தடுப்பணை தூர்வாரப்பட்டு மழைக்காக காத்திருக்கிறது.

கவுசிகா நீர்க் கரங்கள் அமைப்பு சார்பில், கோவை, திருப்பூர் மாவட்டங்களில், குளம், குட்டைகள் தேர்வு செய்யப்பட்டு, சீரமைப்பு பணி நடைபெறுகிறது. இதில் கோவில்பாளையம் கவுசிகா நதி தடுப்பணையில் கடந்த ஆறு மாதங்களாக, சீரமைப்பு பணி நடைபெற்றது. குப்பைகளை அகற்றுதல், மரக்கன்றுகள் நடுதல், கரைகளை பலப்படுத்துதல், ஆழப்படுத்துதல் ஆகிய பணிகள் நடைபெற்றன. 'இந்த தடுப்பணை இயன்ற அளவு ஆழப்படுத்தப்பட்டிருக்கிறது.

கோடை மழை பெய்து, தடுப்பணையில் நீர் தேங்கி, சுற்றுவட்டாரத்தில் நிலத்தடி நீர்மட்டம் உயர வேண்டும் என்பதற்காக எதிர்பார்த்து காத்திருக்கிறோம்,' என, தன்னார்வலர்கள் தெரிவித்தனர்.

Advertisement