கொலை வழக்கில் தேடப்பட்டவர் சரண்
சூலூர்: ஆச்சான் குளக்கரையில் வாலிபரை அடித்து கொலை செய்த வழக்கில், தேடப்பட்டு வந்த நபர் போலீசாரிடம் சரண் அடைந்தார்.
சூலூர் அடுத்த நீலம்பூர் ஆச்சான் குளக்கரையில், கடந்த, 18 ம்தேதி வாலிபர் சடலம் மீட்கப்பட்டது. கொலை வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரித்தனர். அன்று மாலை, பரமக்குடியை சேர்ந்த கோகுல், 28 நீலம்பூர் போலீசாரிடம் சரணடைந்தார். கோகுல், ஹரீஷ் குமார், கொலை செய்யப்பட்ட சரவணன் ஆகிய மூவரும் ஒரே நிறுவனத்தில் வேலை செய்து வந்ததும், சம்பவத்தன்று மூவரும் ஆச்சான் குளக்கரையில் மது அருந்தி உள்ளனர்.
அப்போது ஏற்பட்ட தகராறில், கோகுலும், ஹரீஸ்குமாரும் சேர்ந்து சரவணனை அடித்து கொன்றது தெரிந்தது. தலைமறைவான ஹரீசை போலீசார் தேடிவந்த நிலையில், நேற்று மதியம் நீலம்பூர் போலீஸ் ஸ்டேஷனில் அவர் சரணடைந்தார். அவரை கைது செய்து போலீசார் விசாரிக் கின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
ஜூன் 18ல் ராஜ்யசபா இடைத்தேர்தல்; தவெகவுக்கு ஜாக்பாட்
-
முதல்வர் விஜய் அமைச்சரவை விரிவாக்கம்; விசிக, முஸ்லிம் லீக் அமைச்சர்கள் பதவியேற்பு
-
ஹோண்டுராஸில் இரு இடங்களில் துப்பாக்கிச்சூடு; 6 போலீசார் உள்பட 25 பேர் சுட்டுக்கொலை
-
இந்தியாவின் சந்திரயான்-3 திட்டம்; அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனம் விருது வழங்கி கவுரவிப்பு
-
நாமக்கல் மாவட்டத்திற்கு நான்கு அமைச்சர்
-
கோவைக்கு 2 அமைச்சர்களை தந்து முதல்வர் விஜய் அதிர்ச்சி வைத்தியம்; வேலுமணியின் அமைச்சராகும் கனவு தவிடுபொடி
Advertisement
Advertisement