4 விமானங்கள் ரத்து; 12 தாமதம்: ஏர்போர்ட்டில் பயணியர் தவிப்பு
சென்னை: விமான நிலையத்திற்கு வர வேண்டியதும், புறப்பட வேண்டியதுமான நான்கு விமானங்கள் திடீரென ரத்து செய்யப்பட்டன. அதேபோல, 12 விமானங்கள் தாமதமாக இயக்கப்பட்டன. இதனால் பயணியர் தவிப்பிற்குள்ளாகினர்.
மும்பையில் இருந்து சென்னைக்கு மே 18 இரவு 8:25 மணிக்கு வரவேண்டிய விமானம், சென்னையில் இருந்து மும்பைக்கு இரவு 9:05 மணிக்கு செல்ல வேண்டிய 'ஏர் இந்தியா' விமானங்கள், காரணமின்றி ரத்து செய்யப்பட்டன.
அதுமட்டுமல்லாமல், குவைத்தில் இருந்து மே 19 அதிகாலை 2:25 மணிக்கு சென்னைக்கு வரும் 'குவைத் ஏர்லைன்ஸ்' விமானம், அதிகாலை 3:25 மணிக்கு, சென்னையில் இருந்து குவைத் செல்லும் அதே விமானம் ரத்து செய்யப்பட்டது. பயணியர் வருகை குறைவால் விமானங்கள் ரத்து செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.
எனினும், டிக்கெட் முன்பதிவு செய்த பயணியருக்கு முறைப்படி தகவல் வழங்கப்படவில்லை.
மேலும், மே 18 இரவு 8:00 மணியில் இருந்து, மே 19 அதிகாலை வரை சென்னை விமான நிலையத்தில் கோலாலம்பூர், பிராங்க்பார்ட், டில்லி, மும்பை, கொல்கட்டா, புனே, ஹைதராபாத், பெங்களூரு, கொச்சி, கோவை ஆகிய இடங்களுக்கு செல்லும் 12 விமானங்கள், இரண்டு மணி நேரத்திற்கு மேல் தாமதமாக புறப்பட்டன. ரத்து மற்றும் தாமதம் குறித்து விமான நிலைய ஆணைய அதிகாரிகளடம் கேட்டதற்கு 'நிர்வாக மற்றும் இயக்க காரணங்களால் விமான நிறுவனங்கள் சேவையை மாற்றி அமைத்துள்ளன' என்றனர். இதனால் பயணியர் தவிப்பிற்குள்ளாகினர்.
மேலும்
-
பேச்சுப் போட்டியில் மாணவர்கள் சாதனை
-
மெட்டபாலோமிக்ஸ், புரோட்டியோமிக்ஸ் வேளாண் பல்கலை செயல்முறை பயிற்சி
-
மகாத்மா காந்தி முதுநிலை பல் மருத்துவ கல்லுாரி தேசிய அளவில் 23வது இடம் பிடித்து சாதனை
-
சுகாதாரத்துறை மூலம் டெங்கு விழிப்புணர்வு முகாம்
-
புதுச்சேரி தொழில்நுட்ப பல்கலைக்கழகம் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்து
-
பூங்காவில் விழுந்த மரம் அகற்றப்படாத அவலம்