பெண்ணிடம் சில்மிஷம்: மாநகராட்சி ஊழியர் கைது
வேளச்சேரி: வீட்டில் தனியாக இருந்த பெண்ணிடம் சில்மிஷத்தில் ஈடுபட்ட, மாநகராட்சி தற்காலிக ஊழியர் கைது செய்யப்பட்டார்.
சென்னை, கலங்கரை விளக்கம், அம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் பத்மநாபன், 40. அடையாறு மண்டலம், 177வது வார்டில், மலேரியா தடுப்பு தற்காலிக ஊழியராக பணி புரிந்தார்.
நேற்று முன்தினம், வீடு தோறும் சென்று கொசு ஒழிப்பு தடுப்பு பணியில் ஈடுபட்டார். அப்போது, ஒரு வீட்டில் தனியாக இருந்த 27 வயது பெண்ணிடம், வீட்டு கழிப்பறையை பயன்படுத்த கேட்டுள்ளார்.
மாநகராட்சியில் இருந்து வருவதால், நம்பிக்கையாக வீட்டில் அனுமதித்தார். கழிப்பறை பயன்படுத்திவிட்டு வெளியே வந்தவர், பெண்ணிடம் சில்மிஷம் செய்துள்ளார்.
இது குறித்து அளித்த புகாரை அடுத்து, வேளச்சேரி போலீசார், நேற்று பத்மநாபனை கைது செய்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
பேச்சுப் போட்டியில் மாணவர்கள் சாதனை
-
மெட்டபாலோமிக்ஸ், புரோட்டியோமிக்ஸ் வேளாண் பல்கலை செயல்முறை பயிற்சி
-
மகாத்மா காந்தி முதுநிலை பல் மருத்துவ கல்லுாரி தேசிய அளவில் 23வது இடம் பிடித்து சாதனை
-
சுகாதாரத்துறை மூலம் டெங்கு விழிப்புணர்வு முகாம்
-
புதுச்சேரி தொழில்நுட்ப பல்கலைக்கழகம் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்து
-
பூங்காவில் விழுந்த மரம் அகற்றப்படாத அவலம்
Advertisement
Advertisement