மகளிர் கால்பந்து லீக் போட்டி :புழல் எப்.சி., அபார வெற்றி
சென்னை: மகளிர் கால்பந்து லீக் போட்டியில், புழல் எப்.சி., அணி வெற்றி பெற்றது.
சென்னை கால்பந்து சங்கம் சார்பில், சென்னை மண்டல அளவில் மகளிருக்கான கால்பந்து லீக் போட்டி, சென்னையில் பல்வேறு மைதானங்களில் நடக்கிறது.
அந்த வகையில், மே 19, பேசின்பிரிட்ஜ் பகுதியில் நடந்த போட்டியில், புழல் எப்.சி., அணி, பெகாசஸ் எப்.சி., அணியை எதிர்த்து மோதியது. இதில் அசத்திய புழல் எப்.சி., அணி 3 - 0 என்ற கோல் கணக்கில், அபார வெற்றியை பதிவு செய்தது.
அடுத்த போட்டியில் ப்யூல் எப்.சி., அணி, ரைட் டிராக் எப்.சி., அணியை எதிர்த்து மோதியது. இதில், ப்யூல் எப்.சி., அணி 1 - 0 என்ற கோல் கணக்கில் வெற்றியை பதிவு செய்தது.
தொடர்ந்து தாலந்த் எப்.சி., அணி, பி.பி.சி., - எப்.சி., அணியை எதிர்த்து போட்டியிட்டது. இதில் அசத்திய தாலந்த் எப்.சி., அணி 3 - 0 என்ற கோல் கணக்கில் அசத்தல் வெற்றியை பதிவு செய்தது.
மேலும்
-
பேச்சுப் போட்டியில் மாணவர்கள் சாதனை
-
மெட்டபாலோமிக்ஸ், புரோட்டியோமிக்ஸ் வேளாண் பல்கலை செயல்முறை பயிற்சி
-
மகாத்மா காந்தி முதுநிலை பல் மருத்துவ கல்லுாரி தேசிய அளவில் 23வது இடம் பிடித்து சாதனை
-
சுகாதாரத்துறை மூலம் டெங்கு விழிப்புணர்வு முகாம்
-
புதுச்சேரி தொழில்நுட்ப பல்கலைக்கழகம் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்து
-
பூங்காவில் விழுந்த மரம் அகற்றப்படாத அவலம்