4 பேரிடம் ரூ. 1.56 லட்சம் மோசடி
புதுச்சேரி: புதுச்சேரியில் சைபர் மோசடி கும்பலிடம் 4 பேர் ரூ.1.56 லட்சம் இழந்துள்ளனர்.
அரியாங்குப்பத்தை சேர்ந்தவர், ஆன்லைனில் சுற்றுலா தலங்களில் தங்குவதற்கு அறைகளின் விவரங்களை தேடியுள்ளார். அப்போது, அவரை தொடர்பு கொண்ட மர்மநபர், அறை முன்பதிவிற்கு பணம் செலுத்தும்படி கூறியுள்ளார். இதைநம்பிய அவர், ரூ. 79 ஆயிரத்து 800 அனுப்பியுள்ளார். அதன்பின் மர்மநபரை தொடர்பு கொள்ள முடியவில்லை.
இதுபோல், கோரிமேட்டை சேர்ந்தவர் 9 ஆயிரத்த 200, காலாப்பட்டைச் சேர்ந்த பெண் 27 ஆயிரத்து 400, அரியாங்குப்பத்தை சேர்ந்தவர் 39 ஆயிரத்து 773 என மொத்தம் 4 பேர் மோசடி கும்பலிடம் ரூ. 1 லட்சத்து 56 ஆயிரத்து 173 இழந்துள்ளனர்.
இதுகுறித்த புகாரின் பேரில், புதுச்சேரி சைபர் கிரைம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement