ஊட்டி ரோஜா கண்காட்சி: 10 பரிசுகளை வென்ற கல்லுாரி

ஊட்டி: ஊட்டி ரோஜா கண்காட்சியில், ஜே.எஸ்.எஸ்., பார்மசி கல்லுாரி, 10 பரிசுகளை வென்றுள்ளது.

ஊட்டியில் ஒரு வாரம் நடந்த ரோஜா கண்காட்சியின் நிறைவு விழாவை முன்னிட்டு நடந்த பரிசளிப்பு நிகழ்ச்சியில், ஜே.எஸ்.எஸ்., பார்மசி கல்லுாரிக்கு,தொட்டிகளில் வளர்க்கப்பட்ட ரோஜாக்களில் மூதல் மூன்று இடங்களுக்கான பரிசு வழங்கப்பட்டது. மேலும், ரோஜா அலங்காரம், ரோஜா ரங்கோலி மற்றும் ரோஜா தயாரிப்புகளுக்கு, 7 பரிசுகள் வழங்கப்பட்டது.

இந்த பரிசுகளை கல்லுாரியின் முதன்மை அலுவலர் பசுவண்ணா, பேராசிரியர்கள் சண்முகம், பிரியங்கா, பிரியதர்ஷினி, கல்லுாரி அலுவலர் மோகன்குமார் உள்ளிட்டோர் பெற்று கொண்டனர். இதற்கு ஏற்பாடு செய்த கல்லுாரி நிர்வாகிகளுக்கு தோட்டக்கலை துறையினர், கல்லுாரி நிர்வாகிகள் பாராட்டு தெரிவித்தனர்.





Advertisement