பிரக்ஞானந்தா மீண்டும் 'டிரா'

புக்காரெஸ்ட்: 'சூப்பர் செஸ் கிளாசிக்' தொடரின் ஐந்தாவது சுற்றில் இந்தியாவின் பிரக்ஞானந்தா 'டிரா' செய்தார்.
'கிராண்ட் செஸ் டூர்' 11வது சீசன், 6 தொடர்களாக நடக்கிறது. இதன் 2வது தொடரான 'சூப்பர் செஸ் கிளாசிக்', ருமேனியாவின் புக்காரெஸ்ட் நகரில் நடக்கிறது. இந்தியாவின் பிரக்ஞானந்தா, உஸ்பெகிஸ்தானின் சின்டாரோவ் உள்ளிட்ட 10 பேர் பங்கேற்கின்றனர்.
இதன் ஐந்தாவது சுற்றில் பிரக்ஞானந்தா, அமெரிக்காவின் சோ வெஸ்லே மோதினர். பிரக்ஞானந்தா வெள்ளை நிற காய்களுடன் களமிறங்கினார். துவக்கத்தில் இருந்து இருவரும் சமபலத்தில் விளையாடினர். முடிவில் 45 நகர்த்தலில் போட்டி 'டிரா' ஆனது.
நெதர்லாந்தின் அனிஷ் கிரி, ஜெர்மனியின் வின்சென்ட் கீமர் மோதிய போட்டி 32 நகர்த்தலில் 'டிரா' ஆனது. அமெரிக்காவின் பேபியானோ, ருமேனியாவின் பாக்டன் மோதிய மற்றொரு போட்டி 34 நகர்த்தலில் 'டிரா' ஆனது.
ஐந்து சுற்றுகளின் முடிவில், வின்சென்ட் கீமர் (3.5 புள்ளி) முதலிடத்தில் உள்ளார். அனிஷ் கிரி (3.0), பிரான்சின் ஜோர்டான் வான் பாரீஸ்ட் (3.0), பிரக்ஞானாந்தா (3.0) அடுத்த மூன்று இடத்தில் உள்ளனர்.

Advertisement