முசோலினி அதிர்ச்சி அலை * உலக கால்பந்து கவுன்ட் டவுண்
இத்தாலியில், 1934ல் (மே 27 - ஜூன் 10) இரண்டாவது உலக கோப்பை தொடர் நடந்தது. 16 அணிகள்பிரதான சுற்றில் விளையாடின. 1930ல் உருகுவேயில் நடந்த முதல் உலக கோப்பை தொடரை ஐரோப்பிய அணிகள் புறக்கணித்தன. இதற்கு பதிலடியாக இத்தொடரை உருகுவே புறக்கணித்தது.
இத்தாலியின் அப்போதைய பிரதமர் முசோலினி தனது 'பாசிச' கொள்கையை பரப்பும் அரசியல் களமாக, உலக கோப்பை தொடரை பயன்படுத்த முயன்றார். இத்தாலி அணி மோதவிருந்த போட்டிகளுக்கு முதல் நாள், நடுவர்களை சந்தித்து, தீர்ப்புகளை இத்தாலி அணிக்கு சாதகமாக வழங்க வேண்டும் என கட்டளையிட்டார்.
இரண்டு நாள்
இத்தாலி, ஸ்பெயின் அணிகள் மோதிய காலிறுதி இரண்டு நாள்நடந்தது. முதல் நாளில் இரு அணி வீரர்களும் ஆக்ரோஷமாக மோதிக் கொண்டதில் பலர் காயமடைந்தனர். கூடுதல் நேரத்தின் முடிவில் போட்டி 1-1 என 'டிரா' ஆனது. அப்போதைய விதிமுறைப்படி போட்டி, அடுத்த நாள் மீண்டும் நடத்தப்பட்டது. கிசப்பா மயாஒரு கோலடிக்க, இத்தாலி, 1-0 என வெற்றி பெற்றது.
ரோமில் நடந்த பைனலில், தனக்கென ஒதுக்கப்பட்ட 'பாக்சில்' முசோலினி அமர்ந்து போட்டியை ரசித்தார்.முதல் 70 நிமிடம் வரை, இரு அணிகளும் கோல் எதுவும் அடிக்கவில்லை.
ஆட்டத்தின் 71வது நிமிடத்தில் செக்கோஸ்லோவேக்கியாவின் பக், ஒரு கோல் அடிக்க, 1-0 என முன்னிலை பெற்றது. இதனால் முசோலினி சோகத்தின் உச்சத்திற்கே சென்றார். இதற்கு, 81வது நிமிடத்தில் இத்தாலியின் ஓர்சி கோல் அடிக்க, போட்டி 1-1 என சமநிலை பெற்றது. பின் கூடுதல் நேரத்தில் (90+5வது நிமிடம்) சியாவியோ ஒரு கோல் அடிக்க, இத்தாலி அணி 2-1 என்ற கணக்கில் வெற்றி பெற்று, உலக கோப்பையை கைப்பற்றியது.
'பிபா' விருது
உலக கோப்பை கால்பந்து தொடரில் அதிக கோல் அடித்தவருக்கு 'கோல்டன் பூட்' விருது வழங்கப்படும். 1982ல் முதன்முறையாக 'கோல்டன் ஷூ' என்ற பெயரில் வழங்கப்பட்ட இவ்விருது, 2010 முதல் 'கோல்டன் பூட்' என்று அழைக்கப்படுகிறது.
* தொடரின் சிறந்த வீரருக்கான 'கோல்டன் பால்' விருது, 1982 முதல் வழங்கப்படுகிறது. அர்ஜென்டினாவின் மெஸ்ஸி, அதிகபட்சமாக இரண்டு முறை (2014, 2022) இவ்விருதை கைப்பற்றினார்.
* சிறந்த கோல் கீப்பருக்கான 'கோல்டன் கிளவ்' விருது, முதல் முறையாக 1994ல் வழங்கப்பட்டது. இவ்விருது சோவியத் வீரர் லெவ் யாஷின் பெயரில் வழங்கப்பட்டது. 2010ல் 'கோல்டன் கிளவ்' என பெயர் மாற்றப்பட்டது.
லுாகா மாட்ரிச் தேர்வு
உலக கோப்பை கால்பந்து தொடருக்கான 26 பேர் கொண்ட குரோஷிய அணி அறிவிக்கப்பட்டது. இதில், 'மிட்பீல்டர்' லுாகா மாட்ரிச் 40, இடம் பெற்றுள்ளார். கடந்த 2006ல் சர்வதேச அரங்கில் காலடி வைத்த மாட்ரிச், 2018ல் 'பாலன் டி ஆர்' விருது பெற்றார். ஐந்தாவது முறையாக உலக கோப்பையில் (2006, 2014, 2018, 2022, 2026) களமிறங்க உள்ள மாட்ரிச், குரோஷியாவுக்காக அதிக போட்டிகளில் (196 போட்டி, 28 கோல்) விளையாடிய வீரர்கள் வரிசையில் முதலிடத்தில் உள்ளளார். இம்முறை உலக கோப்பையில் 200வது சர்வதேச போட்டி என்ற மைல்கல்லை எட்ட காத்திருக்கிறார்.
மேலும்
-
'போர்வாள்' நாளிதழ் துவங்கினார் இபிஎஸ்!
-
வெளிநாடுகளில் இந்தியாவின் கவுரவத்தை உறுதி செய்யும் மோடி: சரத் பவார் பாராட்டு
-
மெலோனிக்கு 'மெலோடி'யை பரிசளித்த பிரதமர் மோடி; வைரலாகும் கலகலப்பு வீடியோ
-
அதிமுக எம்எல்ஏக்கள் அமைச்சரவையில் இடம்பெறமாட்டார்கள்; திருமா தகவல்
-
புதிய வாகனத்தை இயக்கிப் பார்த்து முதல்வர் விஜய் ஆய்வு
-
அமைச்சரவையில் இடம்; விசிக, முஸ்லிம் லீக்கிற்கு தவெக அழைப்பு