இந்திய அணி அறிவிப்பு * ரிஷாப் பன்ட் நீக்கம்

கவுகாத்தி: இந்திய ஒருநாள் அணியில் இருந்து ரிஷாப் பன்ட் நீக்கப்பட்டார்.
இந்தியா வரவுள்ள ஆப்கானிஸ்தான் அணி, ஒரு டெஸ்ட் (ஜூன் 6-10, புதிய சண்டிகர்), மூன்று போட்டிகள் (ஜூன் 14, 17, 20, இடம்: தர்மசாலா, லக்னோ, சென்னை) கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்கிறது. இதற்கான இந்திய அணி நேற்று அறிவிக்கப்பட்டது.
டெஸ்ட், ஒருநாள் அணிக்கு சுப்மன் கில் கேப்டனாக தொடர்கிறார். பணிச்சுமை காரணமாக இத்தொடரில் இருந்து வேகப்பந்து வீச்சாளர் பும்ரா, 'ஆல் ரவுண்டர்' ஜடேஜாவுக்கு ஓய்வு தரப்பட்டது.
டெஸ்ட் அணிக்கு துணைக் கேப்டனாக ராகுல் நியமிக்கப்பட்டார். ரிஷாப் பன்ட் நீக்கப்பட்டார்.
'டி-20' உலக கோப்பை தொடரில் இந்தியா கோப்பை வெல்ல கைகொடுத்த சஞ்சு சாம்சனுக்கு, ஒருநாள் அணியில் இடம் கிடைக்கவில்லை. சுழற்பந்து வீச்சு 'ஆல் ரவுண்டர்' அக்சர் படேல் இரு அணியிலும் சேர்க்கப்படவில்லை.

டெஸ்ட் அணி
சுப்மன் கில் (கேப்டன்), ராகுல் (துணைக் கேப்டன்), ஜெய்ஸ்வால், சாய் சுதர்சன், ரிஷாப் பன்ட், தேவ்தத் படிக்கல், நிதிஷ் குமார், வாஷிங்டன் சுந்தர், குல்தீப், முகமது சிராஜ், பிரசித் கிருஷ்ணா, மானவ் சுதர், குர்னுார் பிரார், ஹர்ஷ் துபே, துருவ் ஜுரெல்.

ஒருநாள் அணி
சுப்மன் கில் (கேப்டன்), ஷ்ரேயஸ் ஐயர் (துணைக் கேப்டன்), ரோகித் சர்மா, கோலி, ராகுல், இஷான் கிஷான், ஹர்திக் பாண்ட்யா, நிதிஷ் குமார், வாஷிங்டன் சுந்தர், ஹர்ஷ் துபே, குல்தீப், அர்ஷ்தீப் சிங், பிரசித் கிருஷ்ணா, பிரின்ஸ் யாதவ், குர்னுார் பிரார்.

நான்கு அறிமுகம்
இந்திய அணியில் குர்னுார் யாதவ், ஹர்ஷ் துபே, மானவ் சுதர், பிரின்ஸ் யாதவ் என நான்கு வீரர்கள் அறிமுக வாய்ப்பு பெற்றனர். இதில் குர்னூர் யாதவ், ஹர்ஷ் துபே இரு அணியிலும், மானவ் (டெஸ்ட்), பிரின்ஸ் (ஒருநாள்) தலா ஒரு அணியில் இடம் பிடித்தனர்.

Advertisement