தொழிற் பயிற்சி நிலையங்களில் மாணவர் சேர்க்கை துவக்கம்

ராமநாதபுரம்: ராமநாதபுரத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் தொழிற்பயிற்சி நிலையங்களில் மாணவர் சேர்க்கை துவங்கியது.

ராமநாதபுரம் மாவட்டத்தில் பரமக்குடி, ராமநாதபுரம், முதுகுளத்துார், கடலாடி, கமுதி, உத்தரகோசமங்கை அரசினர் தொழிற்பயிற்சி நிலையங்களில் உள்ள அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கான மாணவர் சேர்க்கை மே 16 முதல் ஜூன் 3 வரை நடக்கிறது. ஓராண்டு தொழிற்பிரிவில் வெல்டர், கணினி இயக்குபவர், சோலார் டெக்னீசியன், தையல் தொழில் நுட்பம், ரோபோடிக்ஸ் டிஜிட்டல் மேனுபக்சரிங் டெக்னீசியன், மரைன் இன்ஜின் பிட்டர் உள்ளிட்ட பிரிவுகள் உள்ளன. இரு ஆண்டு தொழிற்பிரிவில் கம்மியர் மோட்டார் வாகனம், பிட்டர், டர்னர், எலக்ட்ரீசியன், வயர்மேன், ஸ்பின்னிங் டெக்னீசியன், எலக்ட்ரானிக் மெக்கானிக், ப்ரிஜ் மற்றும் ஏ.சி., டெக்னீசியன், மெக்கானிஸ்ட், சி.என்.சி., மிஷின் டெக்னிசியன், மெடிக்கல் டெக்னிசியன் உள்ளிட்ட பிரிவுகள் உள்ளன.  இந்த பிரிவுகளுக்கு எட்டு மற்றும் பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற 14 முதல் 40 வயதிற்குட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். பெண்களுக்குரிய தொழிற்பிரிவிற்கு வயது வரம்பு இல்லை. பயிற்சியில் சேர விரும்புவோர் மதிப்பெண் சான்றிதழ், மாற்றுச் சான்றிதழ், ஜாதிச்சான்றிதழ், ஆதார் அட்டை, பாஸ்போர்ட் அளவு புகைப்படம், அலைபேசி எண், மின்னஞ்சல் முகவரியுடன் தொழிற்பயிற்சி நிலையத்தில் இலவசமாக விண்ணப்பிக்கலாம். www.skilltraining.tn.gov.in என்ற இணையதளம் மூலமும் விண்ணப்பிக்கலாம்.  பயிற்சியில் சேரும் மாணவர்களுக்கு மாதாந்திர கல்வி உதவித் தொகை ரூ.750, விலையில்லா மடிக்கணினி, சைக்கிள், சீருடை, வரைபட கருவிகள் வழங்கப்படும் என பரமக்குடி அரசு தொழிற்பயிற்சி நிலைய முதல்வர் வாளை ஆனந்தம் தெரிவித்துள்ளார். –––

Advertisement