பந்தலுார் நுாலகத்தில் கோடைகால போட்டிகள்
பந்தலுார்: பந்தலுார் நுாலகத்தில் மாணவர்களுக்கு, கோடைகால விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டது. நூலகர் அறிவழகன் வரவேற்றார்.
மாவட்ட நுாலகர் கிளமென்ட் தலைமை வகித்து பேசுகையில், ‘‘கடந்த காலங்களில் நுாலகங்களில், செய்திதாள் வாசிப்பு, கதை புத்தகங்கள் வாசித்தல் போன்ற நிலை இருந்தது. தற்போது படித்து அரசு வேலை வாய்ப்புகளை பெரும் அளவிற்கு, பொது அறிவு களஞ்சியமாக நுாலகங்கள் மாறி உள்ளன,’’ என்றார்.
இந்தியன் வங்கி மேலாளர் காந்தி பேசுகையில், ‘‘மாணவர்கள் சாதிக்க வேண்டும் என்ற எண்ணத்தில், போட்டி தேர்வுகளுக்கு படித்தால் கண்டிப்பாக வெற்றி கிடைக்கும்,’’ என்றார்.
நுாலகத்திற்கு விளையாட்டு பொருட்கள் வழங்கிய தாஸ் கவுரவிக்கப்பட்டார். கேரம் உட்பட பல போட்டிகள் நடந்தது. கூடலுார் சுற்றுச்சூழல் மைய செயலாளர் சிவசுப்ரமணியம் உட்பட பலர் பங்கேற்றனர். நுாலகர் நித்திய கல்யாணி நன்றி கூறினார்.
மேலும்
-
ஹார்முஸ் ஜலசந்தி முடக்கம் விரைவில் முடிவுக்கு வருகிறது?
-
விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லுாரியில் கட்டுமானப் பணிகள்: கலெக்டர் ஆய்வு
-
இளநிலை நுாலக உதவியாளர் பதவிக்கான தேர்வு அறிவிப்பு
-
விசைப் படகுகள் கள ஆய்வு கணக்கெடுக்கும் பணி
-
ராஜிவ் நினைவு நாள் கவர்னர் மரியாதை
-
தவெக அமைச்சரவையில் விசிக; திருமா அறிவிப்பு