அரசு அருங்காட்சியகம் பணி கலெக்டர் நேரில் ஆய்வு
விழுப்புரம்: அரசு அருங்காட்சியகம் பணிகளை கலெக்டர் ஷேக் அப்துல் ரஹ்மான் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
விழுப்புரம் அடுத்த பனங்குப்பம் ஊராட்சியில் 1.30 ஏக்கர் பரப்பளவில் 6.62 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அரசு அருங்காட்சியம் கட்டப்பட்டு வருகிறது. இங்கு கட்டடம், உட்புறக்காட்சி அறை, தொன்மையான பொருட்களை காட்சிப்படுத்துவதற்கான அலமாரி, குடிநீர் வசதி, கழிவறை வசதி, சுற்றுச்சுவர் இருசக்கர வாகனம் நிறுத்துமிடம் மற்றும் புல்வெளி அமைப்பு உள்ளிட்ட கட்டமைப்புகள் அமைக்கப்பட்டு வருகிறது.
இப்பணிகளை கலெக்டர் ேஷக் அப்துல் ரஹ்மான் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அப்போது, பணிகள் தொடர்பான முன்னேற்றம் குறித்து பொதுப்பணித்துறை பொறியாளர்களிடம் கேட்டறிந்தார். பொதுப்பணித்துறை செயற் பொறியாளர் ராஜூ, உதவி செயற் பொறியாளர் பாலாஜி உட்பட பலர் பங்கேற்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement