கந்தசாமி மெட்ரிக் பள்ளி மாணவர்கள் அபாரம்
பொள்ளாச்சி: ஆனைமலை, கணபதிபாளையம் கந்தசாமி மெட்ரிக் பள்ளியில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில், தேர்வு எழுதிய 99 மாணவர்களும் தேர்ச்சி பெற்று, பள்ளியானது, 100 சதவீதம் தேர்ச்சி பெற்றது. மாணவி தனுஸ்ரீ,493 மதிப்பெண் பெற்று முதலிடமும், மாணவர் தருண், 490 மதிப்பெண் பெற்று இரண்டாமிடமும், தரணிஷ், கவினா ஆகியோர் தலா 489 மதிப்பெண் பெற்று மூன்றாவது இடம் பெற்றனர்.
கணிதத்தில், தனுஸ்ரீ, தருண், தரணிஷ், தருண் கிருஷ்ணன், ரூபேஷ் என ஐந்து பேரும்; அறிவியலில், தனுஸ்ரீ, தருண் கிருஷ்ணன், தர்ஷனா, தர்ஷன், ஸ்ரீ சரண், மனோஜ் ஆகியோரும்; சமூக அறவியலில், தரணிஷ், ரத்தின பிரபா ஆகியோர் 100 மதிப்பெண்கள் பெற்றனர். 35 மாணவர்கள், 450க்கு மேலும், 56 மாணவர்கள், 400க்கு மேலும் பெற்றனர்.
பள்ளியின் சார்பில் முதல் ஐந்து இடம் பெற்ற மாணவர்களை பள்ளி முதல்வர் சண்முகம், செயலர் உமா மகேஸ்வரி, ஒருங்கிணைப்பாளர் ரவிச்சந்திரன் ஆகியோர் நினைவு பரிசு வழங்கி பாராட்டினர். தேர்வு எழுதிய அனைத்து மாணவர்களுக்கும் வாழ்த்து தெரிவித்தனர்.
மேலும்
-
ஹார்முஸ் ஜலசந்தி முடக்கம் விரைவில் முடிவுக்கு வருகிறது?
-
விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லுாரியில் கட்டுமானப் பணிகள்: கலெக்டர் ஆய்வு
-
இளநிலை நுாலக உதவியாளர் பதவிக்கான தேர்வு அறிவிப்பு
-
விசைப் படகுகள் கள ஆய்வு கணக்கெடுக்கும் பணி
-
ராஜிவ் நினைவு நாள் கவர்னர் மரியாதை
-
தவெக அமைச்சரவையில் விசிக; திருமா அறிவிப்பு