மணல் கடத்தியவர் கைது

திருவெண்ணெய்நல்லுார்: திருவெண்ணெய்நல்லுார் அருகே மணல் கடத்திய 4 பேர் மீது போலீசார் வழக்குப் பதிந்து ஒருவரை கைது செய்தனர்.

திருவெண்ணெய்நல்லுார் சப் இன்ஸ்பெக்டர் மாதவன் மற்றும் போலீசார் கரடிப்பாக்கம் தென்பெண்ணை ஆற்று பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது அப்பகுதியில் மினி வேனில் மணல் கடத்தியவர்கள் போலீசை பார்த்ததும் வண்டியை அங்கேயே நிறுத்திவிட்டு தப்பியோடினர்.

இதையெடுத்து போலீசார் துரத்தி சென்று ஒருவரை மடக்கி பிடித்து விசாரித்தில் கரடிப்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த பழனி மகன் பார்த்திபன், 33; என்பதும், தப்பியோடியவர்கள் அதே பகுதியைச் சேர்ந்த விஜய், காமராஜ், ரவிக்குமார் எனவும் தெரிந்தது. அதனைத் தொடர்ந்து பார்த்திபன் உட்பட 4 பேர் மீதும் வழக்குப் பதிந்து பார்த்திபனை கைது செய்தனர். தப்பியோடிய மூன்று பேரையும் தேடி வருகின்றனர்.

Advertisement