அம்மா உணவக மேம்பாடு: ஜெ. ஆன்மா விஜயை பாராட்டும்
எப்பவும் நல்லா இருக்கணும்
அதிமுக ஆட்சியில் தொடங்கிய திட்டத்தை தனது ஆட்சியில் சிறப்பாக செயல்படுத்த விஜய் நினைப்பது வரவேற்கத்தக்கது. உணவு எப்போதும் தரமாக இருக்க வேண்டும். விலை குறைவாக இருந்தாலும் தரமும் தூய்மையும் போதாது என்றுதான் பலர் அம்மா உணவகத்துக்கு போகவில்லை. அந்த இரண்டையும் கொடுத்தால் ஏழை, எளியோருக்கு பெரிய உதவியாக இருக்கும்.
- செந்தில்குமார், ஒண்டிப்புதூர்.
திட்டத்தை விரிவுபடுத்த வேண்டும்
ஏழையின் சிரிப்பில் இறைவனை காணலாம் என்றார் அண்ணாதுரை. அம்மா உணவகங்களுக்கு வசதிபடைத்தவர்கள் யாரும் செல்வதில்லை. அது ஏழைகளுக்கு செய்யும் சேவை. இறைவனுக்கு செய்யும் சேவைக்கு சமம். அதனால் தான் முதல்வர் உணவு தரத்தை உயர்த்தி திட்டத்தை தொடர உத்தரவிட்டு இருக்கிறார். திட்டத்தில் எல்லோரும் பயன்பெறும் வகையில் அவர் விரிவுபடுத்த வேண்டும்.
- லட்சுமி, துடியலுார்.
நல்ல மனம் வாழ்க
நல்ல விஷயங்களை யார் துவக்கினால் என்ன அது யார் திட்டமாக இருந்தால் என்ன அதை தொடர்ந்து செயல்படுத்துவதற்கு ஒரு நல்ல மனசு வேண்டும். அது புதிய முதல்வருக்கு இருக்கிறது. அதனால் பாரபட்சமில்லாமல் நல்ல திட்டங்கள் தொடர்கின்றன. அதில் ஏழைகளுக்கு உணவளிக்கும் திட்டமான அம்மா உணவகங்கள் பெயரை கூட மாற்றாமல் தொடர்வதை நிச்சயமாக வரவேற்கிறோம்.
- சிவராமன், கே.வடமதுரை
பசி போக்கும் அருமருந்து
பசித்தவர்களின் துயர் தீர்க்கும் அருமருந்து அம்மா உணவகங்கள். மலிவான விலைக்கு வழங்கப்படும் உணவு இயலாதவர்கள், இல்லாதவர்களுக்கு பேருதவியாக இருக்கிறது. அவற்றை மேம்படுத்தி தரமான உணவு வழங்க உத்தரவிட்டிருப்பதை வரவேற்கிறேன். உணவு வகைகளின் தரத்தை மேம்படுத்துதல் என்ற சொல்லை முக்கியமானதாக கருதுகிறேன். முதல்வருக்கு மனமார்ந்த நன்றி.
- ஹரிஹரன், கோவைப்புதூர்
வரவேற்கதக்க செயல்
கடந்த ஆட்சியிலும் அம்மா உணவகங்கள் செயல்பட்டன. ஆனால், உணவு தரமா என்றால் சந்தேகமே. வேறு வழியின்றி, அரசு மருத்துவமனை வளாகத்தில் வாங்கி சாப்பிட்டவர்களை பார்த்திருக்கிறேன். யார் ஆட்சியில் கொண்டுவரப்பட்டது என்பதைப் பார்க்காமல், முதல்வர் விஜய் இந்த விஷயத்தில் மேம்படுத்த நடவடிக்கை எடுத்திருப்பது வரவேற்கத்தக்கது. பாராட்டத்தக்கது.
- ஜீவிதா, கல்வீரம்பாளையம்
சரியான நேரம் தான்
விற்கிற விலைவாசியில் ஏழை மக்கள் ஆரோக்கியமான உணவுகளை எல்லாம் சாப்பிட முடியாது. கொரோனா காலத்தில் கூட அம்மா உணவகம் தான் பல ரின் பசியை போக்கியது. அத்தியாவசிய பொருட்கள் தட்டுப்பாடு ஏற்படும் என்று எச்சரிக்கிறார்கள். இந்த காலத்தில் அம்மா உணவகத்தை மேம்படுத்தி தரமான உணவு வழங்குவது அவசியமானது. இது நிச்சயமாக ஏழைகளுக்கு உதவியாக இருக்கும்.
- ஜார்ஜ் விக்டர், உக்கடம்
ஏழைகளுக்கு பேருதவி
அம்மா உணவகம் அருமையான திட்டம். கையில் 5 ரூபாய் இருந்தால் ஒரு வேளை, 10 ரூபாய் இருந்தால் 2 வேளை சாப்பிட முடியும். கூலி தொழிலாளிகள் ஒவ்வொரு வேளையும் 100, 200 கொடுத்து வெளியில் சாப்பிட முடியாது. அம்மா உணவகத்தில் 200 ரூபாய் இருந்தால் 7 பேர் திருப்தியாக சாப்பிடலாம். த.வெ.க ஆட்சியில் அதை மேம்படுத்துவதை மனமார வரவேற்கிறேன்.
- அந்தோணியம்மா, புலியகுளம்
இது பெரும் புண்ணியம்
அம்மா உணவகம் அற்புதமான திட்டம். 30 ரூபாய் இருந்தால் மதிய உணவு சாப்பிட்டு விடலாம். 20 ரூபாய்க்கு காலை உணவு சாப்பிடலாம். தி.மு.க. ஆட்சிக்கு வந்த பிறகு இதை உதாசீனம் செய்தது வருந்தத்தக்க நடவடிக்கை. விஜய் மீண்டும் செயல்படுத்த முன் வந்திருப்பது பாராட்டுக்குரிய விஷயம் வரவேற்கலாம். சாப்பாடு விஷயத்தில் செலவை பார்க்காமல் நல்லது செய்வது பெரிய புண்ணியம்.
- காளிஸ்வரன், தெலுங்குபாளையம்
சரியான நடவடிக்கை
கூலி வேலை செய்வோர், மேன்ஷனில் தங்கியிருக்கும் இளைஞர்கள், வயதானவர்கள் எல்லாம் அம்மா உணவகத்தில் தான் சாப்பிடுகின்றனர். அங்கு தரும் உணவை தரம் உயர்த்துவது சிறந்த முன்னெடுப்பு. தற்போது காஸ் தட்டுப்பாடு இருக்கும் சூழலில் கூட, ஏழை மக்களின் பசியாற்ற ஒரு அறிவிப்பை வெளியிட்டிருப்பதன் மூலம், மக்களுக்கு இன்னும் நெருக்கமாகி விட்டார் விஜய்.
- கண்ணபிரான், கோவில்பாளையம்
சிறுதானிய உணவு தரலாம்
ஜெயலலிதா துவக்கிய திட்டம். ஏழை எளிய மக்கள், கூலி தொழிலாளர்கள், கட்டட தொழிலாளர்களுக்கு வரமாக இருக்கிறது. அம்மா உணவகத்தை கருணாநிதி உணவகம் என மாற்றுவதற்கு எதிர்ப்பு வந்ததால், திமுக அரசு அதை கண்டுகொள்ளவே இல்லை. விஜய் அப்படி வேறுபாடு பாராமல் செயல்படுவது நல்ல விஷயம். இட்லி, சாம்பார் சாதம் தவிர, சிறுதானிய உணவுகளும் வழங்கினால் நல்லது.
- அப்பாஸ், குறிச்சி
மாற்றம் தேவை தான்
அம்மா உணவக திட்டம் அ.தி.மு.க. ஆட்சியில் தொடங்கினாலும், அதே பெயரில் செயல்படுத்த அக்கட்சியினர் வலியுறுத்தியதால், தி.மு.க. ஆட்சியில் அரை மனதாக உணவு வழங்கப்பட்டது. எந்த கட்டமைப்பு வசதிகளும் மேம்படுத்தவில்லை. திட்டத்தை யார் தொடங்கினாலும் மக்களுக்கான சேவை சிறப்பாக இருக்க வேண்டுமென முடிவெடுப்பது சிறந்த தலைமை பண்பின் அடையாளம்.
- திவ்யா, செட்டிபாளையம்
கண்காணிப்பு அவசியம்
விலைவாசி தாங்க முடியாத அளவுக்கு உயர்ந்து வரும் வேளையில், மூன்று வேளையும் தரமான உணவு குறைந்த விலையில் கிடைத்தால், அது எளிய மக்களின் பசியை ஆற்றுவதோடு வாழ்வாதாரத்திற்கும் துணையாக இருக்கும். அறிவிப்போடு நிற்காமல், அம்மா உணவகங்களின் உள்கட்டமைப்பையும், உணவு தரத்தையும் தொடர்ந்து கண்காணித்தல் மக்கள் மனதார பாராட்டுவார்கள்.
-சுப்பிரமணியன், பவர்ஹவுஸ்
@quote@ ஒரு ஆட்சியில் கொண்டு வந்த நல்ல திட்டங்களை, அடுத்து ஆட்சிக்கு வருபவர்கள் நிறுத்தக்கூடாது. ஆனால் தி.மு.க.வும், அ.தி.மு.க.வும் மாற்றி மாற்றி பல திட்டங்களை கிடப்பில் போட்டு வந்துள்ளனர். விஜய் அந்த மாதிரி இல்லாமல், தி.மு.க. கைவிட்ட அம்மா உணவகத்தை மீண்டும் செயல்படுத்த உத்தரவிட்டு இருப்பது வரவேற்கத்தக்கது. இதற்காக ஜெயலலிதாவின் ஆன்மாவே விஜயை பாராட்டும்.
- மோகன்ராஜ், உக்கடம்quote
வெறும் அறிவிப்போடு நின்று விடாமல் நிஜமாகவே உரிய தரத்துடன் அம்மா உணவகத்தை மேம்படுத்தி இன்னும் கூடுதலாக அம்மா உணவகம் திறக்கப் பட வேண்டும். அத்துடன் உழைக்க முடியாத நிலையில் உள்ள மாற்றுத்திறனாளிகள்,சமூகத்தில் வறிய நிலையில் உள்ள 70 வயதுக்கு மேற்பட்ட ஏழை ஆண், பெண் இருபாலருக்கும் இந்த உணவகத்தில் இலவச உணவு வழங்க வேண்டும். இவ்வாறு செய்தால் முதல்வரை நிச்சயம் மனதார பாராட்டலாம். மாதம் ஒன்றரை லட்சம் சம்பளம் வாங்கும் குடும்பம் கூட மகளிர் உரிமைத்தொகை ரூ1000 பெறுகிறார்கள். அவ்வாறு இருக்கையில் வறிய நிலையில் உள்ள மாற்றுத் திறனாளிகள், 70 வயதுக்கு மேற்பட்ட ஆண், பெண் இவர்களுக்கு வயிற்றுப் பசியாற உணவுக்காக அரசு கூடுதல் செலவு செய்தால் தவறேதும் இல்லை.
இதில் ஆன்மா என்று சொல்கிறீர்களே எல்லோரும் தப்பு செய்த பொது எல்லாம் ஆன்மா என்ன செய்தது?
மகுடேஸ்வரன் கேள்வி சரிதான்! இறந்தபின் நாம் எல்லோரும் என்ன தவறு செய்திருந்தாலும் புனிதராகி விடுவோம்! எல்லோரையும் புனிதராக்கி விடுவோம்! ஹ்யூமன் வீக்னஸ்! மறதி பல சமயங்களில் சிறந்த மருந்து!
நல்ல செயல்! பாராட்டுக்கள்! அம்மா மலிவு விலை குடிநீர் விநியோகமும் மிகவும் உதவியாக இருந்தது! முந்தைய அரசு அம்மா பெயரை மாற்றி முத்தமிழ் வித்தகர் பெயரில் தொடர்ந்து இருக்கலாம்! மக்களுக்கு உதவி எந்த பெயரிலும் செய்யலாம்! தவறி விட்டார்கள்!
"விலைவாசி தாறுமாறாக உயர்ந்து வரும் இந்தச் சூழலில், கூலித் தொழிலாளர்கள், மற்றும் வெளியூர் இளைஞர்களுக்கு மிகக் குறைந்த விலையில் பசி போக்கும் கேடயமாக இருப்பது அம்மா உணவகம் மட்டும்தான். முந்தைய ஆட்சியில் கைவிடப்பட்ட இந்தத் திட்டத்திற்கு உயிர் கொடுத்து, தரமான உணவு வழங்க உத்தரவிட்ட முதல்வருக்கு மனமார்ந்த நன்றிகள்"
"ஆட்சி மாறினாலும் முந்தைய ஆட்சியின் நல்ல திட்டங்களை முடக்கக் கூடாது என்பதற்கு இந்த நடவடிக்கை ஒரு மிகச்சிறந்த உதாரணம். அம்மா உணவகங்களை மேம்படுத்தி, ஊழியர்களுக்குப் பயிற்சி அளிக்க அரசு எடுத்துள்ள முடிவு ஏழை எளிய மக்களின் வயிற்றில் பால் வார்த்துள்ளது. TVK அரசின் இந்த மக்கள் நலப் போக்கு பாராட்டுக்குரியது."
"ஜெயலலிதா கொண்டு வந்த அம்மா உணவக திட்டத்தை கடந்த தி.மு.க அரசு அரசியல் காழ்ப்புணர்ச்சியால் கண்டு கொள்ளவே இல்லை, பல இடங்களில் மூடவும் செய்தது. ஆனால், புதிய முதல்வர் விஜய் அந்த அரசியல் பாரபட்சம் பார்க்காமல், ஏழைகளின் பசி போக்கும் இந்தத் திட்டத்தை மேம்படுத்தி, தரத்தை உயர்த்த உத்தரவிட்டிருப்பது வரவேற்கத்தக்கது. நல்ல திட்டங்கள் யார் கொண்டு வந்தாலும் தொடர வேண்டும்"மேலும்
-
ஹார்முஸ் நீரிணையை கைப்பற்றும் திட்டம் ஏதுமில்லை; சொல்கிறது நேட்டோ
-
10ம் வகுப்பு ரிசல்ட் வெளியானது; 94.31 சதவீத மாணவ, மாணவிகள் தேர்ச்சி
-
சவுமியா சுவாமிநாதனுக்கு லண்டன் ராயல் சொசைட்டியின் கவுரவம்
-
'சாட்ஜிபிடி'(ChatGPT)-யில் சத்குருவின் “மிராக்கிள் ஆஃப் மைண்ட்” தியான செயலி!
-
பல்லவ மன்னர்களின் செப்பேடுகள்: ஸ்காட்லாந்தில் இருந்து மீட்க முயற்சி
-
ஊழியர்கள் நியமனத்திற்கு பிறகு மாதந்தோறும் மின்கட்டணம் முறை; சொல்கிறார் அமைச்சர் நிர்மல்குமார்