ஊழியர்கள் நியமனத்திற்கு பிறகு மாதந்தோறும் மின்கட்டணம் முறை; சொல்கிறார் அமைச்சர் நிர்மல்குமார்
சென்னை: 'திமுக அரசில் மின்சார வாரியத்தில் முறைகேடுகள், விதிமீறல்கள் நடந்திருக்கின்றன. ஊழியர்களை அதிகப்படுத்தி விட்டு தான், மாதம் தோறும் மின்கட்டண கணக்கீடு செய்வதற்கான நடவடிக்கை எடுக்கப்படும்,' என்று மின்சாரம் மற்றும் சட்டத்துறை அமைச்சர் நிர்மலர் குமார் தெரிவித்துள்ளார்.
சென்னையில் நேற்றிரவு செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது; திமுக அரசில் பல இடங்களில் முறைகேடுகள், விதிமீறல்கள் நடந்திருக்கிறது. அதில் நிறைய சிபிஐயிடம் ஒப்படைக்கப்பட்டிருக்கிறது. அதுபோன்ற தவறுகளை நாம் நிறுத்த வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். கோடிக்கணக்கான மக்கள் பயன்படுத்தும் மின்சார வாரியத்தை சீரமைக்க வேண்டியுள்ளது. கண்டிப்பாக, முதல்வரின் உத்தரவின் பேரில், முழுவதுமாக மின்வாரியத்தை சீரமைத்து, புத்துணர்ச்சி கொடுக்கப்பட வேண்டியுள்ளது.
ஊழியர்கள் பற்றாக்குறை உள்ளது. இத்தனை ஆண்டுகளாக செலவினங்கள் மட்டுமே காட்டப்பட்டுள்ளது. ஊழியர்களை அதிகரிப்பதற்கான எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஊழியர்களை அதிகப்படுத்தி விட்டு தான், மாதம் தோறும் மின்கட்டண கணக்கீடு செய்வதற்கான நடவடிக்கை எடுக்கப்படும். ஏனெனில் மீட்டர் கணக்கெடுக்க ஆட்கள் தேவைப்படும். பொதுமக்களுக்கு எவ்வளவு பயன்பட முடியுமோ, அதை நோக்கி தான் இந்த நிறுவனம் நகரும். அனைத்தையும் சீரமைத்தப் பிறகு, பொதுமக்கள் பயன்படும் வகையில் அனைத்தும் மாற்றப்படும்.
தேர்தல் வாக்குறுதிகள் அனைத்தும் நிறைவேற்றப்படும். மாதக் கணக்கீடுகள் கண்டிப்பாக ஊழியர்கள் பற்றாக்குறையை நிவர்த்தி செய்த பிறகு, ஆலோசித்து முடிவு செய்யப்படும்.
மின்வாரியத்திற்கு இரண்டரை லட்சம் கோடி கடன் இருக்கிறது. முழுமையாக சீரமைத்து, லாபகரமான நிறுவனமாக மாற்றி, முற்றிலும் மக்கள் பயனடையும் வகையில் மாற்றுவதற்கான அனைத்து சாத்தியக்கூறுகளும் இருக்கிறது. முந்தைய ஆட்சிகளில் செய்த விதிமீறல்கள், முறைகேடுகளால் இந்த நிறுவனம் கொஞ்சம் கொஞ்சமாக தேய்ந்து விட்டது.
200 யூனிட் மின்சாரம் இலவசம் திட்டம் கடந்த 10ம் தேதி முதல் நடைமுறைக்கு வந்து விட்டது. ஊழல், முறைகேடு மற்றும் லஞ்சங்களை தவிர்த்தாலே அனைத்துத் துறைகளும் புத்துணர்ச்சி பெறும், இவ்வாறு அவர் கூறினார்.
தமிழ்நாட்டில் தற்போது இரண்டு மாதத்திற்கு 200யூனிட் விலையில்லா மின்சாரமா இல்லை இதை ஒரு மாதத்திற்கு மாற்றினால் மாதந்தோறும் 200யூனிட் விலையில்லா மின்சாரமா?
சரி. ஊழியர் நியமனம் எப்போது ,?
என்ன rate fix பண்ணப் போறீங்க ?