இத்தாலியில் பிரதமர் மெலோனியுடன் கொலோசியம் சென்றார் மோடி

18

ரோம்: இத்தாலி சென்ற பிரதமர் மோடி, அந்நாட்டு பிரதமருடன் ஒரே காரில் பயணித்து வரலாற்றுப் புகழ் பெற்ற கொலோசியம் அரங்கை பார்வையிட்டார்.


மேற்காசியா மற்றும் ஐரோப்பாவில் உள்ள ஐந்து நாடுகளுக்கு அரசு முறை பயணமாக பிரதமர் மோடி சென்றுள்ளார். வெளிநாட்டு பயணத்தின் இறுதிக்கட்டமாக இத்தாலிக்கு பிரதமர் மோடி சென்றுள்ளார். அங்கு ரோம் நகரில் விமான நிலையத்தில் பிரதமர் மோடியை இத்தாலி நாட்டின் துணை பிரதமர் அண்டோனியோ தஜானி நேரில் சென்று வரவேற்றார்.

இத்தாலியை சேர்ந்த நடனக் கலைஞர்கள் இந்திய கலாசார நடனங்களையும், இசைக்கச்சேரியையும் நிகழ்த்தி பிரதமர் மோடிக்கு வரவேற்பு அளித்தனர். இத்தாலி சென்ற பிரதமர் மோடி, அந்நாட்டு பிரதமருடன் ஒரே காரில் பயணித்து வரலாற்றுப் புகழ் பெற்ற கொலோசியம் அரங்கை பார்வையிட்டார்.

வாய்ப்பு கிடைத்தது



இது குறித்து பிரதமர் மோடி சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறி இருப்பதாவது: ரோமில் தரையிறங்கியதும், பிரதமர் மெலோனியை இரவு உணவின்போது சந்திக்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது.

அதைத் தொடர்ந்து, வரலாற்றுச் சிறப்புமிக்க Colosseumக்கும் நான் வருகை தந்தேன். இந்தியா-இத்தாலி நட்புறவை மேலும் வலுப்படுத்துவது குறித்து மெலோனியுடன் பேச்சுவார்த்தை நடத்த ஆவலுடன் இருக்கிறேன். இவ்வாறு பிரதமர் மோடி கூறியுள்ளார்.

நன்றி



ரோம் நகரில் எனக்கு அளித்த அன்பான வரவேற்பிற்காக, இத்தாலியில் வாழும் இந்தியச் சமூகத்தினருக்கு பிரதமர் மோடி நன்றி தெரிவித்தார். அவர் ''இந்தியா-இத்தாலி உறவுகளை வலுப்படுத்துவதில் அவர்கள் கொண்டுள்ள அர்ப்பணிப்பு உண்மையிலேயே பாராட்டுக்குரியவை. உலகெங்கிலும் வாழும் இந்தியப் புலம்பெயர் சமூகம், தொடர்ந்து நமது நாட்டிற்குப் பெருமை சேர்த்து வருகிறது'', என தெரிவித்தார். .


@block_P@

பாராட்டுக்கள்

இத்தாலியில் இந்திய இசை மிகுந்த வரவேற்பைப் பெற்று வருகிறது. ரோம் நகரில் நடைபெற்ற சமூக வரவேற்பு நிகழ்ச்சியின்போது, ​​ஐந்து இத்தாலியக் கலைஞர்கள் இசை நிகழ்த்தியதற்கு பாராட்டுகள் என பிரதமர் மோடி சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். block_P

Tamil News


@block_G@

எனது நண்பரே வருக!

இத்தாலிக்கு சென்றுள்ள பிரதமர் மோடியை வரவேற்கும் விதமாக அந்நாட்டு பிரதமர் ஜார்ஜியோ மெலோனி உற்சாக பதிவு ஒன்றை இணையத்தில் வெளியிட்டு இருக்கிறார். பிரதமர் மோடியுடன் செல்பி எடுத்த புகைப்படத்தை பகிர்ந்து, ''எனது நண்பரை ரோம் நகருக்கு வரவேற்கிறேன்'' என குறிப்பிட்டுள்ளார்.block_G

Advertisement