மூத்தோர் தடகளத்தில் அசத்தல்; வீராங்கனைக்கு பாராட்டு
உடுமலை: மாநில அளவிலான மூத்தோர் தடகள போட்டியில், பல்வேறு பதக்கங்களை குவித்து உடுமலை வீராங்கனைக்கு விளையாட்டு ஆர்வலர்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.
உடுமலையை சேர்ந்த ராதாமணி, மூத்தோர் தடகள போட்டிகளில் தொடர்ந்து பங்கேற்று வருகிறார். மாவட்ட, மாநில, தேசிய அளவிலான போட்டிகளிலும் இவர் பல்வேறு வெற்றிகளை பெற்றுள்ளார்.
இந்நிலையில், மயிலாடுதுறையில் மாநில அளவிலான மூத்தோர் தடகள போட்டிகள் நடைபெற்றது. இதில் பல்வேறு பிரிவுகளில் பங்கேற்ற வீராங்கனை ராதாமணி, மூன்று தங்கம் மற்றும் ஒரு வெள்ளி பதக்கம் வென்றார்.
மாநில அளவிலான போட்டியில் பதக்கங்களை குவித்த ராதாமணிக்கு, உடுமலை பகுதியை விளையாட்டு ஆர்வலர்கள் மற்றும் மக்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
சாய்ராம் குரூப் நிறுவனம் அன்ன தானம் வழங்கல்
-
நிழற்குடை அமைக்கப்படுமா?
-
முதல்வர் பிறந்த நாள் கொண்டாட்டம் திண்டிவனத்தில் மக்கள் திண்டாட்டம்: உத்தரவை பறக்க விட்ட நிர்வாகிகள்
-
கடலில் மாயமான 3 மீனவர்களை மீட்க கோரி குடும்பத்தினர்கள் மனு
-
மனைவி மாயம் கணவர் புகார்
-
அரசு பள்ளி மாணவர்களை தாக்கிய 3 பேர் மீது வழக்கு
Advertisement
Advertisement