முதல்வர் பிறந்த நாள் கொண்டாட்டம் திண்டிவனத்தில் மக்கள் திண்டாட்டம்: உத்தரவை பறக்க விட்ட நிர்வாகிகள்

தமிழக முதல்வராக விஜயின் 52வது பிறந்த நாள் விழா, மாநிலம் முழுவதும் கட்சி நிர்வாகிகள் கொண்டாடினர்.

முதல்வர் பிறந்த நாள் கொண்டாட்டம் குறித்து முதல்வர் விஜய் அறிவுறுத்தலின் பேரில் கட்சித் தலைமை, கட்சியினருக்கு அறிவுரை வழங்கியிருந்தது. அதில், 'முதல்வர் பிறந்த நாளின் போது பொதுமக்களுக்கு இடையூறு இல்லால் கொண்டாட வேண்டும். சாலைகளை மறித்து பேனர்கள் வைக்கக் கூடாது. கட்சிக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் எந்தவித செயல்களிலும் நிர்வாகிகள் ஈடுபடக்கூடாது. மாணவர்கள், முதியோருக்கு நலத்திட்ட உதவிகளை வழங்க வேண்டும்' என தெரிவித்திருந்தது.

ஆனால், முதல்வர் அறிவுறுத்தலையும் மீறி நேற்று திண்டிவனத்தில் த.வெ.க., நிர்வாகிகள் திராவிட கட்சிகளுக்கும் மேலாக பொதுமக்கள், வாகன ஓட்டிகளின் எரிச்சலுக்குள்ளாக்கினர்.

திண்டிவனத்தில் போக்குவரத்து மையாக உள்ள காந்தி சிலையை மறைத்து ஷாமியானா பந்தல் போடப்பட்டு, பொது மக்களுக்கு பிரியாணி வழங்கினார். இதனால், காந்தி சிலை பகுதியில், ஒரு பக்கம் கல்லுாரி செல்லும் சாலை, மற்றொரு பக்கம் மாவட்ட தலைமை அரசு மருத்துவமனைக்கு செல்லும் பாதை, காந்தி சிலைக்கு எதிரே சாலை வழியாக, செஞ்சி மார்க்கத்திலிருந்து திண்டிவனம் வரும் வாகனங்கள். இதேபோல் திண்டிவனத்திலிருந்து செஞ்சி மார்க்கமாக செல்லும் வாகனங்கள் செல்ல முடியாமல் 30 நிமிடம் வரை போக்குவரத்து கடுமையாக பாதித்தது. இதனால், பொதுமக்கள் கடும் சிரமம் அடைந்தனர்.

மேலும், திண்டிவனம் நேரு வீதியில் இரு பக்கமும் வரிசையாக வர்த்தக நிறுவனங்கள், கடைகளை மறைத்து வியாபாரிகளுக்கு இடையூறாக பேனர்கள் வைக்கப்பட்டிருந்தது.

இதனால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள், வியாபாரிகள் பெரிதும் மன உளைச்சலுக்குள்ளாகினர்.

Advertisement