அரசு பள்ளி மாணவர்களை தாக்கிய 3 பேர் மீது வழக்கு
குறிஞ்சிப்பாடி: அரசுப்பள்ளி மாணவர்களை தாக்கிய, 3 பேர் மீது போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
குறிஞ்சிப்பாடி அரசுப்பள்ளியை சேர்ந்த, 4 மாணவர்கள் நேற்று முன்தினம், மதிய உணவு சாப்பிட பஸ் நிலையம் பகுதியில் உள்ள கடைக்கு சென்றனர். பைக்கில் வந்த சிலர் மாணவர்களை வழி விடுமாறு கூறியதில் இரு தரப்பிற்கும் தகராறு ஏற்பட்டது.
அப்போது, மாணவர்கள் அனைவரையும் பைக்கில் அமர வைத்து, குறிஞ்சிப்பாடி பூங்காவிற்கு அழைத்து சென்றனர். அங்கு மாணவர்களின் சட்டையை கழற்ற வைத்து தாக்கி, மொபைல் போனில் புகைப்படம் எடுத்து மிரட்டல் விடுத்தனர். சம்பவம் குறித்து மாணவர் ஒருவரின் சகோதரர் குறிஞ்சிப்பாடி போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிந்து, மாணவர்களை தாக்கிய குறிஞ்சிப்பாடி, சின்ன கடை வீதியை சேர்ந்த பாலமுருகன், பாலா, சுரேந்தர் ஆகிய 3 பேர் மீது போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.
மேலும்
-
பயன்பாட்டில் இருக்கும் 36 ரபேல் விமானங்கள்; பாகிஸ்தானின் பொய் மீண்டும் அம்பலம்
-
எங்களுக்கு இதெல்லாம் தெரியாது; பட்டியல் வாசித்த முதல்வர் விஜய்
-
'எங்கப்பா... உங்க அப்பாவை காணோம்!'
-
திமுக ஆட்சியில் வெளியிட்ட 500 மின்சார பஸ் கொள்முதல் டெண்டர்; ரத்து செய்தது தவெக அரசு
-
இந்தியா உடனான முக்கிய வர்த்தக ஒப்பந்தம் இறுதிக்கட்டம்; அமெரிக்கா தகவல்
-
இறைச்சி கழிவை மீண்டும் வெள்ளலூரில் கொட்ட முடிவு