மனைவி மாயம் கணவர் புகார்

வடலுார்: மனைவி மாயமானது குறித்து கணவர் போலீசில் புகார் அளித்துள்ளார்.

வடலுார் அடுத்த மேட்டுக்குப்பம் பகுதியை சேர்ந்தவர் குப்புசாமி, 55; இவரது மனைவி அருள்ஜோதி, 50; தம்பதிக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். சற்று மனநிலை பாதிக்கப்பட்ட அருள்ஜோதி, கடந்த 16ம் தேதி வீட்டில் இருந்து மாயமானார். பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இதையடுத்து தனது மனைவியை கண்டுபிடித்து தர குப்புசாமி வடலுார் போலீசில் அளித்தார். போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.

Advertisement