சாய்ராம் குரூப் நிறுவனம் அன்ன தானம் வழங்கல்

கடலுார்: கடலுார் சாய்ராம் குரூப் ஆப் நிறுவனம் சார்பில் தமிழக முதல்வர் விஜய் பிறந்த நாளையொட்டி அன்னதானம் வழங்கப்பட்டது.

தமிழக முதல்வர் விஜய் பிறந்த நாளையொட்டி கடலுார் சாய்ராம் குரூப் ஆப் நிறுவனம் சார்பில் முதுநகர் ஏணிக்காரன்தோட்டத்தில் உள்ள இக்னைட் டிரஸ்ட் முதியோர் இல்லத்தில் அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. சாய்ராம் குரூப் ஆப் நிறுவன நிர்வாக இயக்குனர் பாபு (எ) ஜானகிராமன் தலைமை தாங்கி, முதியோர்களுக்கு இனிப்பு மற்றும் அன்னதானம் வழங்கினார். விழாவில், மாவட்ட தொழிற்சங்க இணை செயலாளர் கணேசன், மனோஜ், சதீஷ், கணேசன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Advertisement