108 ஆம்புலன்ஸ் சேவை மூலம் ஏப்ரலில் 7,331 பேர் பயன்

திருவள்ளூர்:திருவள்ளூர் மாவட்டத்தில், 108 ஆம்புலன்ஸ் சேவையை பயன்படுத்தி, கடந்த ஏப்., மாதத்தில் மட்டும், 7,331 பேர் பயனடைந்துள்ளனர்.

திருவள்ளூர் மாவட்டத்தில் 108 ஆம்புலன்ஸ் சேவை செயல்பாட்டில் உள்ளது. மாவட்டத்தில் தற்போது, மொத்தம் 71 ஆம்புலன்ஸ் வாகனங்கள் பொதுமக்கள் சேவையில் உள்ளன.

இதில், பச்சிளம் குழந்தைகளுக்கான பிரத்யேக ஆம்புலன்ஸ் 2 இயக்கப்படுகிறது. மேலும், 1 முதலுதவி இருசக்கர வாகனமும் அவசர சேவையில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளது.

சாலை விபத்து, பிரசவம், பச்சிளங் குழந்தைகள் உள்ளிட்ட, பல்வேறு அவசர காலங்களில் பொதுமக்கள், 108 ஆம்புலன்ஸ் வாயிலாக, மருத்துவமனைகளுக்கு சென்று, பயனடைந்து வருகின்றனர். அந்த வகையில், கடந்த, ஏப்ரல் மாதத்தில் மட்டும், 7,331 அவசர அழைப்புகளுக்கு சேவை வழங்கப்பட்டுள்ளது.

அவற்றில், சாலை விபத்து - 2,124, கர்ப்பிணியர் - 664, ஒரு மாதத்திற்குள்பட்ட பச்சிளம் குழந்தைகள் - 40, குழந்தைகள் நலம் - 13 மற்றும் இதர அவசர மருத்துவ உதவிகள் - 4,490 பேர், 108 ஆம்புலன்ஸ் பயன்படுத்தி, பலனடைந்துள்ளனர். 108 ஆம்புலன்ஸ் சேவை 24 மணி நேரமும் தடையின்றி பொதுமக்களுக்கு இலவசமாக செயல்பட்டு வருகிறது.

மருத்துவ அவசர உதவி தேவைப்படுவோர் 108 என்ற கட்டணமில்லா எண்ணை தொடர்பு கொள்ளலாம், என, திருவள்ளூர் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் தெரிவித்துள்ளார்.

Advertisement