மானுவல் நியூயர் காயம்
பெர்லின்: ஜெர்மனி கோல்கீப்பர் மானுவல் நியூயர் கணுக்காலில் காயமடைந்தார்.
ஜெர்மனி தலைநகர் பெர்லினில், ஜெர்மன் கோப்பை கால்பந்து 83வது சீசனுக்கான பைனலில் (மே 23) பேயர்ன் முனிக், 'நடப்பு சாம்பியன்' ஸ்டட்கர்ட் அணிகள் மோதுகின்றன. இப்போட்டிக்கான பேயர்ன் முனிக் அணியில் கோல்கீப்பர் மானுவல் நியூயர் 40, இடம் பெற்றிருந்தார். ஆனால், இடது கணுக்கால் காயத்தால் பாதிக்கப்பட்ட இவர், பைனலில் விளையாடுவது சந்தேகம்.
சமீபத்தில் சர்வதேச போட்டிக்கான ஓய்வு முடிவை திரும்ப பெற்ற மானுவல் நியூயர், உலக கோப்பை கால்பந்து தொடருக்கான ஜெர்மனி அணிக்கு தேர்வு செய்யப்பட்டார். தற்போது காயத்தால் பாதிக்கப்பட்டுள்ள இவர், உலக கோப்பையில் பங்கேற்பாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
ஒரு விசில் சத்தத்துக்கே ஆடிப்போன திராவிட மாடல்: பா.ஜ., கிண்டல்
-
பெரிய நிறுவனங்களுக்கு எளிதாக கடன்; சாமானியருக்கு வழங்குவதில் அலட்சியமா?
-
வி.சி.க., முஸ்லிம் லீக் கட்சிகளை விமர்சித்து தி.மு.க., - எம்.பி., ராஜா ஆபாச கருத்து: பல்வேறு தரப்பினரும் கடும் கண்டனம்
-
25 மணி நேரம் மின் தடைஅம்மாபேட்டையில் அவதி
-
சூறைக்காற்றால் எஸ்.பி., ஆபீசில் சாய்ந்த மரம்
-
வாலிபர் மூளைச்சாவு: உறுப்புகள் தானம்
Advertisement
Advertisement