கோவை தொழில்துறையினர் முதல்வர் விஜயுடன் சந்திப்பு!

சென்னை: சென்னையில் முதல்வர் விஜயை கோவை தொழில்துறையினர் சந்தித்து பேசினர்.

முதல்வர் விஜய் நாள்தோறும் பல்வேறு துறைகளின் செயலாளர்கள், அதிகாரிகள், தொழிலதிபர்கள், சமூக அமைப்புகளைச் சேர்ந்தவர்களை சந்தித்து வருகிறார். அந்த வகையில் அவர் இன்று (மே 20) தலைமைச் செயலகத்தில் தென்னிந்திய ஆலைகள் சங்கத்தின் (SIMA) முன்னாள் தலைவர் டி. ராஜ்குமார், பருத்தி நுணிநூல் ஏற்றுமதி மேம்பாட்டுக் குழுவின் (TEXPROCIL) துணைத் தலைவர் மற்றும் SIMA முன்னாள் தலைவர் ரவி சாம் ஆகியோர் சந்தித்து பேசினர்.

சந்திப்பின் போது, இந்திய துணிநூல் தொழில் கூட்டமைப்பின் (CITI) தலைவர் அஸ்வின் சந்திரன், SIMA துணைத் தலைவர் எஸ்.கிருஷ்ணகுமார், துணைத் தலைவர் கே. சிவராஜ், பொதுச் செயலாளர் கே. செல்வராஜு ஆகியோர் உடன் இருந்தனர். துணிநூல் துறையில் மாநிலத்தின் வளர்ச்சி மற்றும் மின் கட்டண வீதங்கள் குறித்தும், தமிழ்நாடு ஒருங்கிணைந்த துணிநூல் கொள்கை 2026யை செயல்படுத்துவது குறித்து பேசினார்கள்.

Advertisement