'கடனை கட்டாததற்கு போனை முடக்கம் செய்யக்கூடாது' ஆர்.பி.ஐ., புதிய விதிமுறை

கடனில் மொபைல் போன் வாங்கியவர்கள், கடனை திருப்பி செலுத்த தவறினாலும் போன் சேவையை முழுதுமாக முடக்க வங்கிகளுக்கு அதிகாரமில்லை என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. இதுகுறித்து ஆர்.பி.ஐ.,யின் திருத்தப்பட்ட வரைவு விதிமுறைகள் வெளியாகியுள்ளன.

அதில், கடனில் வாங்கப்பட்ட மொபைல்போனுக்கு தவணை செலுத்தா விட்டால், அதன் குறிப்பிட்ட சில செயல்பாடுகளை மட்டுமே கடன் வழங்கிய வங்கி முடக்கலாம். ஆனால், 'அழைப்புகள், இணையதள சேவை, அரசின் முக்கிய அறிவிப்புகளுக்கான அழைப்புகள் முடக்க கூடாது.

மேலும், சில வசதிகள் முடக்கப்பட்ட பிறகு, வாடிக்கையாளர், கடனை செலுத்திய ஒரு மணி நேரத்தில் அந்த வசதிகள் 'அன்லாக்' செய்யப்பட வேண்டும். கடன் வசூல் தொடர்பான அழைப்புகளின் பேச்சு பதிவு செய்யப்பட வேண்டும். இந்த விதிகள், அக்., 1 முதல் அமலுக்கு வருவதற்கு முன்மொழியப்பட்டுள்ளது.

இதுகுறித்து, பொதுமக்கள் தங்கள் கருத்துகளை மே 31 வரை தெரிவிக்கலாம் என்றும் ஆர்.பி.ஐ., தெரிவித்துள்ளது.

Advertisement