5 ஐ.பி.ஓ.,க்கள் சந்தையின் போக்கை மாற்றுமா?

உலகளாவிய புவிசார் அரசியல் பதற்றங்கள் மற்றும் தற்காலிக மந்தநிலைக்கு இடையே, இந்திய பங்கு சந்தைக்கு புதிய உத்வேகம் தரக்கூடிய ஒரு சாதகமான சூழல் தற்போது உருவாகி வருகிறது. வரலாற்றுரீதியாக, சந்தை ஒரு குழப்பமான சூழலில் இருக்கும்போது, 'லேண்ட்மார்க்' என்று சொல்லக்கூடிய மிகப்பெரிய பொது பங்கு வெளியீடுகள் முதலீட்டாளர்களின் நம்பிக்கையை மீட்டெடுத்துள்ளன. அதேபோன்ற ஒரு திருப்புமுனையை ஏற்படுத்த, தற்போது 5 பெரிய நிறுவனங்கள் புதிய பங்கு வெளியீட்டிற்கு தயாராகி வருகின்றன.
Latest Tamil News
@block_B@ வரவிருக்கும் முக்கிய 5 மெகா ஐ.பி.ஓ.,க்கள்: நிறுவனம் பங்கு வெளியீட்டு அளவு காலம் என்.எஸ்.இ., ரூ.21,000 - ரூ.25,000 கோடி 2026ன் இரண்டாம் பாதி போன்பே ரூ.12,000 கோடி 2026 நடுப்பகுதி ரிலையன்ஸ் ஜியோ இன்னும் அறிவிக்கப்படவில்லை 2026 முதல்/இரண்டாம் பாதி எஸ்.பி.ஐ., மியூச்சுவல் பண்டு ரூ.13,000 கோடி செப்டம்பர் 2026 செப்டோ ரூ.11,000 ஜூலை 2026block_B

@block_B@ சந்தைக்கு என்ன?block_B


@block_B@ கடந்த இரண்டு ஆண்டுகளாக, ஆண்டின் இறுதியில்தான் 70 சதவீதம் வரையிலான ஐ.பி.ஓ.,க்கள் வெளியாகின. தற்போதைய சந்தை சூழலையும் உற்றுநோக்கும்போது இந்த ஆண்டும் அதே போன்றதொரு போக்கைத்தான் நாம் பார்க்க போகிறோம். இந்தியாவின் ஐ.பி.ஓ., சந்தை மீண்டும் வலுவான நிலைக்கு திரும்பக்கூடும்.


- அரவிந்த் வசிஷ்டா, தலைவர், இந்திய ஈக்விட்டி மார்க்கெட்ஸ் பிரிவு, சிட்டி குழுமம்block_B

@block_B@ செபியின் முன்மொழிவு


புதிய அல்லது மீண்டும் பட்டியலாகும் பங்குகளின் விலை செயற்கையாக கட்டுப்படாமல், சந்தை தேவை அடிப்படையில் சரியாக நிர்ணயிக்கப்பட வேண்டும் என்பதற்காக செபி சில பரிந்துரைகளை முன்மொழிந்துள்ளது. அதன்படி,


 பங்குகளின் ஆரம்ப விலையை நிறுவனத்தின் உண்மையான மதிப்புக்கு நெருக்கமாக இருக்க வேண்டும்


 சந்தை தேவைக்கேற்ப ஆரம்ப விலை வரம்பு உடனுக்குடன் தானாகவே 10 சதவீதம் வரை மாற்றியமைக்கப்படும்


 'ப்ரீ-ஓபன்' வர்த்தகத்தில் குறைந்தது 5 தனித்தனி பான் கார்டு கொண்ட, வாங்குபவர்களும் விற்பவர்களும் பங்கேற்பது கட்டாயம்.block_B


சாதகம்

 சர்வதேச மற்றும் உள்நாட்டு முதலீடுகள் சந்தைக்குள் வரும்


 அந்தந்த துறை சார்ந்த பங்குகள் விலை உயர வாய்ப்பு

 ஏராளமான புதிய முதலீட்டாளர்கள் சந்தைக்குள் வரக்கூடும் (எல்.ஐ.சி., ஐ.பி.ஓ., வந்தபோது 73 லட்சம் புதிய டிமேட் கணக்குகள் துவங்கப்பட்டன)

பாதகம்

 ஐ.பி.ஓ.,வில் முதலீடு செய்வதற்காக சந்தையில் இருந்து பணத்தை எடுக்க வாய்ப்பு

 நிறுவனங்கள் அதிக விலைக்கு பங்குகளை வெளியிடக்கூடும்

 அரசு, செபி கொண்டு வரும் புதிய விதிகள் இந்நிறுவனங் களின் லாபத்தை பாதிக்க வாய்ப்பு.

Advertisement