ஊழியர்களின் மியூச்சுவல் பண்டு தவணையை அலுவலகமே சம்பளத்தில் பிடித்து செலுத்தலாம் ஜூன் 10 வரை கருத்து கேட்கிறது செபி

சம்பளதாரர்கள் மியூச்சுவல் பண்டுகளில் முதலீடு செய்வதை இன்னும் எளிமையாக்க, 'செபி' புதிய திட்டம் ஒன்றை முன்வைத்துள்ளது. அதன்படி, இனி நிறுவனங்களே ஊழியர்களின் சம்பளத்தை பிடித்தம் செய்து, மியூச்சுவல் பண்டுகளில் முதலீடு செய்வதை அனுமதிக்கலாமா என கருத்து கேட்டுள்ளது.

செபியின் இந்த புதிய திட்டத்தின்படி, தானியங்கி முறையில் சம்பளத்தில் பிடித்தம் செய்யப்படும் என்பதால், முதலீட்டாளர்கள் ஒவ்வொரு மாதமும் தங்கள் எஸ்.ஐ.பி., தவணை தேதியை நினைவில் கொள்ள வேண்டியதில்லை.

இது, நீண்ட கால செல்வத்தை உருவாக்க மிக சிறந்த வழியாக அமையும் என துறை சார்ந்த நிபுணர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.


முக்கிய அம்சங்கள்


1 தற்போது மியூச்சுவல் பண்டுகளில் முதலீடு செய்ய முதலீட்டாளரின் சொந்த வங்கி கணக்கிலிருந்துதான் பணம் செல்ல வேண்டும் என்ற கட்டாயம் உள்ளது. இதை மாற்றி, நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களின் சம்பளத்தில், அவர்களது முதலீடு தவணைக்கான பணத்தை பிடித்தம் செய்து கட்டுவதற்கு அனுமதி வழங்க செபி ஆலோசனை செய்து வருகிறது
2 இந்த வசதி அனைத்து பட்டியலிடப்பட்ட நிறுவனங்களுக்கும், இ.பி.எப்.ஓ.,வில் பதிவு செய்த நிறுவனங்களுக்கும் மற்றும் மியூச்சுவல் பண்டு நிறுவனங்களுக்கும் பொருந்தும்

3 இது கட்டாயமல்ல. விருப்பமுள்ள ஊழியர்கள் மட்டுமே இந்த திட்டத்தை தேர்வு செய்யலாம்

4 மியூச்சுவல் பண்டு நிறுவனங்கள், வினியோகஸ்தர்களுக்கு வழங்கும் கமிஷனை பணமாக வழங்காமல், யூனிட்களாக வழங்கலாம்.

இது குறித்து பொதுமக்கள், தங்களின் கருத்துகளை வரும் ஜூன் 10ம் தேதிக்குள் செபியிடம் சமர்ப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.


@block_B@ செபியின் உத்திரவாதம்


மூன்றாம் தரப்பு முதலீடு என்பதால் பாதுகாப்பு குறித்து கவலைப்பட தேவையில்லை. செபி இதற்காக பல கெடுபிடிகளை விதித்துள்ளது.

 முதலீடு செய்யும் ஊழியருக்கும், பணம் செலுத்தும் நிறுவனத்திற்கும் இடையேயான தொடர்பு முறையாக சரிபார்க்கப்படும்

 ஊழியர்களின் கே.ஒய்.சி., விபரங்கள் துல்லியமாக சரிபார்க்கப்படும்

 பணமோசடி தடுப்பு சட்டத்தின் விதிகள் முறையாக கடைப்பிடிக்கப்படும்

 முதலீட்டை திரும்ப எடுக்கும்போது அல்லது டிவிடெண்டு கிடைக்கும்போது, அந்த பணம் ஊழியரின் சரிபார்க்கப்பட்ட சொந்த வங்கி கணக்கிற்கு மட்டுமே செல்லும். நிறுவனத்தின் கணக்கிற்கோ அல்லது வேறு இடத்திற்கோ பணம் போகாது.block_B
@block_B@ அப்படியே கரன்ட்டு பில், வீட்டு வாடகை, மளிகை பாக்கி எல்லாம் அலுவலகமே பிடித்தம் செய்து கட்டினா ரொம்ப வசதியா இருக்கும்block_B

Advertisement