கணிதம், அறிவியல், சமூக அறிவியல் 'சென்டம்' எண்ணிக்கை உயர்ந்தது 

திருப்பூர்:பத்தாம் வகுப்பு தேர்ச்சியில், தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தலா ஒருவர் நுாற்றுக்கு நுாறு மதிப்பெண் பெற்றுள்ளார். கணிதத்தில், 212 பேரும், அறிவியலில், 752 பேரும், சமூக அறிவியலில், 190 பேரும் என மொத்தம், 1,156 பேர் ஒரு பாடத்தில் நுாற்றுக்கு நுாறு மதிப்பெண் பெற்றுள்ளனர்.

கடந்த, 2025 ல் தமிழில் ஒருவர் கூட நுாற்றுக்கு நுாறு மதிப்பெண் பெறாத நிலையில், நடப்பாண்டு ஒருவர் (தாராபுரம் சக்தி மெட்ரிக் பள்ளி) சென்டம் பெற்றுள்ளார். கடந்த முறை, ஆங்கிலத்தில், 40 ஆக இருந்த சென்டம் இம்முறை, ஒன்றாக (சரவணபுரம், அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர் மட்டும்) குறைந்துள்ளது. கணிதத்தில் கடந்த முறை, 89 பேர் மட்டுமே சென்டம் பெற்ற நிலையில், இம்முறை இது, 212 ஆக உயர்ந்துள்ளது.

அறிவியலில் கடந்தாண்டு, 410 பேரும், சமூக அறிவியலில், 455 பேரும் நுாறு மதிப்பெண் பெற்றிருந்தனர். இந்தாண்டு அறிவியலில், 752 பேரும், சமூக அறிவியலில், 752 பேரும் நுாற்றுக்கு நுாறு பெற்றுள்ளனர். 994 இருந்த ஒரு பாடத்தில் நுாறு மதிப்பெண் பெற்றவர் எண்ணிக்கை நடப்பாண்டு, 1,156 ஆக உயர்ந்துள்ளது.

Advertisement