10ம் வகுப்பு பொதுத்தேர்வில் தளபதி கே.விநாயகம் பள்ளி சாதனை

திருத்தணி: திருத்தணி தளபதி கே.விநாயகம் மேல்நிலைப் பள்ளி 10ம் வகுப்பு பொதுத்தேர்வில், 100 சதவீதம் தேர்ச்சி பெற்று சாதனை படைத்தது.

திருத்தணி தளபதி கே.விநாயகம் மேல்நிலைப் பள்ளி இயங்கி வருகிறது. இப்பள்ளியைச் சேர்ந்த 102 மாணவ -- மாணவியர் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதினர்.

தேர்வு எழுதிய அனைத்து மாணவ -- மாணவியரும் தேர்ச்சி பெற்றனர். மாணவி ஹேமா, டீர்த்திகா ஆகியோர் 493 மதிப்பெண்கள் பெற்று, பள்ளி அளவில் முதலிடம் பிடித்தனர்.

மாணவி பிருந்தா மற்றும் மாணவர் இனியவன் ஆகியோர் 487 மதிப்பெண்கள் பெற்று இரண்டாம் இடத்தையும், கீதிகா ஸ்ரீ 486 மதிப்பெண்கள் பெற்று மூன்றாம் இடத்தையும் பிடித்தனர்.

மாணவ - மாணவியர் அனைவருக்கும், தளபதி விநாயகம் மெட்ரிகுலேஷன் கல்விக் குழும தாளாளர் பாலாஜி பாராட்டு தெரிவித்தார். சாதனை மாணவ மாணவியருக்கு சால்வை அணிவித்து வாழ்த்தினார்.

இந்த நிகழ்ச்சியில் பள்ளி முதல்வர் பாலாஜி, பள்ளியின் தலைமை ஆசிரியர் கவின் பாரதி மற்றும் ஆசிரியர்கள் பெற்றோர்கள் மாணவர் மாணவிகள் பங்கேற்றனர்.





Advertisement