வெறிநாய் தடுப்பூசி செலுத்தும் பணி: கும்மிடிப்பூண்டியில் கண் துடைப்பு
கும்மிடிப்பூண்டி:கும்மிடிப்பூண்டி ஒன்றிய நிர்வாகம் சார்பில், தெரு நாய்களுக்கு வெறிநாய் கடி தடுப்பூசிகள் போடும் பணிகளில், சுணக்கம் ஏற்பட்டுள்ளதாக சமூக ஆர்வலர்கள் தெரிவித்தனர்.
வெறிநாய் கடியால் ஏற்படும் பாதிப்பை கட்டுப்படுத்தும் நோக்கில், தெரு நாய்களுக்கு, வெறி நாய் கடி தடுப்பூசி போட, அனைத்து மாநில அரசுக்கும் உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.
அதன்படி, கும்மிடிப்பூண்டி ஒன்றிய நிர்வாகம் சார்பில், நேற்று முன்தினம், தெரு நாய்களுக்கு வெறிநாய் கடி தடுப்பூசி போடும் பணிகள் தொடங்கப்பட்டன. முதல் நாளன்று, புதுகும்மிடிப்பூண்டி மற்றும் பூவலம்பேடு ஊராட்சிக்கு உட்பட்ட கிராம பகுதிகளில் இருந்து, 16 தெரு நாய்கள் பிடிக்கப்பட்டன.
அவற்றை, கும்மிடிப்பூண்டியில் உள்ள கால்நடை மருத்தகத்திற்கு கொண்டு சென்று, வெறிநாய் கடி தடுப்பூசி போடப்பட்டன. நேற்று பெத்திக்குப்பம் உள்ளிட்ட பகுதிகளில், தெரு நாய்கள் பிடிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.
ஆனால் ஒரு தெரு நாய்க்கு கூட தடுப்பூசி செலுத்தப்படவில்லை.
இது குறித்து சமூக ஆர்வலர் ஒருவர் கூறுகையில், 'நாய்களை பிடித்து சென்று மருந்தகத்தில் வைத்து தடுப்பூசி செலுத்துவது என்பது சாத்தியமற்றது. மேலும், தடுப்பூசி செலுத்திய நாயை அடையாளம் காண, கழுத்தில் பெல்ட் அணியாமல் தெருக்களில் விடப்பட்டு வருகின்றன. இதன் மூலம் நீதிமன்ற உத்தரவை கடமைக்கு நிறைவேற்றி வருவது, அப்பட்டமாக தெரிகிறது' என தெரிவித்தார்.
கும்மிடிப்பூண்டியில் தெருநாய் கடிக்கு ஆளாகும் மக்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், மேற்கண்ட பணிகளை முழுமையாக மேற்கொள்ள வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
மேலும்
-
தரையில் கிடந்த முளைவிட்ட நெல்லை மூட்டை மேல் வைத்து எடுத்த புகைப்படமாம் வாணிபக்கழக அதிகாரி சொல்கிறார்
-
59 ஆண்டுக்குப்பின் அமைச்சரவையில் காங்.,
-
சென்னையில் அதிரடி ஒரே நாளில் 234 ரவுடிகள் கைது போதை பொருள் விற்ற கும்பலில் 101 பேர் கைது
-
அரசு துறைகளில் கோவில் நிதி முதலீடு எதிர்த்த வழக்கில் அரசு பதிலளிக்க உத்தரவு
-
தாம்பரம்-போடி சிறப்பு ரயில்
-
தலைமை பொறியாளர் 'சஸ்பெண்ட்'