‘எரிபொருட்கள் விலை உயர்வால் காய்கறி விலையில் மாற்றமில்லை’

கோவை: பெட்ரோல் டீசல் விலை உயர்வால் காய்கறி விலையில் மாற்றம் இல்லை என, கோவை மாவட்ட காய்கறி மொத்த வியாபாரிகள் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.

எம்.ஜி.ஆர்.மார்க்கெட் காய்கறி மொத்த வியாபாரிகள் சங்க தலைவர் ராஜேந்திரன் கூறியதாவது: 

விளைச்சல் குறைந்தால்தான் காய்கறி விலை உயரும். இப்போது விளைச்சல் அதிகம் இருப்பதால் விலை உயரவில்லை.

சின்ன வெங்காயம் மட்டும் விலை அதிகரித்துள்ளது. கிலோ 50 முதல்  60 ரூபாய்க்கு விற்கிறது. சின்ன வெங்காயத்தை தமிழ் நாட்டுக்குள் மட்டும்தான் பயன்படுத்துகின்றனர்.

அது விளைச்சல் குறையும் போது விலை கூடும். விளைச்சல் அதிமானால் விலை குறையும். தமிழர்கள் அதிகம் வசிக்கும் இலங்கை, சிங்கப்பூர் மற்றும் மலேசியா போன்ற நாடுகளுக்கு சின்ன வெங்காயம் ஏற்றுமதி செய்யப்படுகிறது. அதனாலும் சின்ன வெங்காயம் விலை அதிகரிக்கிறது. 

இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement