மருந்து வணிகர்கள் போராட்டம் பெரியளவில் பாதிப்பில்லை
சென்னை: நாடு முழுதும் மருந்து வணிகர்கள் கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில், மக்கள் மருந்தகம், முதல்வர் மருந்தகம், மருத்துவமனை மருந்தகங்கள் இயங்கியதால், பெரியளவில் பாதிப்பு ஏற்படவில்லை.
இணையவழி மருந்து விற்பனைக்கு தடை விதிக்க வேண்டும்; வலி நிவாரணி, துாக்க மாத்திரைகளை ஆன்லைனில் விற்கக்கூடாது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, நாடு முழுதும் மருந்து வணிகர்கள் நேற்று கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தமிழகத்தில் 40,000 உட்பட நாடு முழுதும் 12.50 லட்சம் மருந்தகங்கள் நேற்று மூடப்பட்டன.
மருந்தகங்கள் மூடப்பட்டதால், முன்னெச்சரிக்கையாக மத்திய அரசின் மக்கள் மருந்தகம், தமிழக அரசின் முதல்வர் மருந்தகம், கூட்டுறவு மருந்தகம் மற்றும் மருத்துவமனை மருந்தகம் என, 5,000 மருந்தகங்கள் செயல்பட அரசு நடவடிக்கை எடுத்தது.
அதனால், மருந்து வணிகர்கள் போராட்டத்தால், பொது மக்கள் பெரியளவில் பாதிக்கப்படவில்லை. இன்று முதல் வழக்கம்போல் மருந்தகங்கள் செயல்படும் என, மருந்து வணிகர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும்
-
ஜூன் 18ல் ராஜ்யசபா இடைத்தேர்தல்; தவெகவுக்கு ஜாக்பாட்
-
முதல்வர் விஜய் அமைச்சரவை விரிவாக்கம்; விசிக, முஸ்லிம் லீக் அமைச்சர்கள் பதவியேற்பு
-
ஹோண்டுராஸில் இரு இடங்களில் துப்பாக்கிச்சூடு; 6 போலீசார் உள்பட 25 பேர் சுட்டுக்கொலை
-
இந்தியாவின் சந்திரயான்-3 திட்டம்; அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனம் விருது வழங்கி கவுரவிப்பு
-
நாமக்கல் மாவட்டத்திற்கு நான்கு அமைச்சர்
-
கோவைக்கு 2 அமைச்சர்களை தந்து முதல்வர் விஜய் அதிர்ச்சி வைத்தியம்; வேலுமணியின் அமைச்சராகும் கனவு தவிடுபொடி