டாஸ்மாக் கடைகளை மூடும் உத்தரவு வரவேற்கத்தக்கது உயர்நீதிமன்றம் கருத்து
மதுரை: தமிழகத்தில் 717 டாஸ்மாக் கடைகளை மூடும் தமிழக அரசின் உத்தரவு வரவேற்கத்தக்கது என கருத்து வெளியிட்ட உயர்நீதிமன்ற மதுரைக் கிளை, 'அவற்றின் அருகிலுள்ள பார்களுக்கு கடை செயல்படாத நாட்களுக்குரிய குத்தகை தொகையை திரும்ப வழங்குவது குறித்து அரசு பரிசீலிக்க வேண்டும்,' என உத்தரவிட்டது.
துாத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த ராஜேஷ் கண்ணன் உள்ளிட்ட சிலர் தாக்கல் செய்த மனு:
'தமிழகத்தில் கல்வி நிறுவனங்கள், வழிபாட்டுத்தலங்கள், பஸ் ஸ்டாண்ட்கள் அருகிலுள்ள 717 டாஸ்மாக் கடைகளை மூட தமிழக அரசு உத்தரவிட்டது. நாங்கள் அக்கடைகளின் அருகில் பார்கள் நடத்த குத்தகை உரிமம் பெற்றுள்ளோம். குத்தகைக் காலம் ஜூன் 30ல் முடிவடைகிறது. அதுவரை மாவட்டத்தில் டாஸ்மாக் கடைகளை மூடும் உத்தரவிற்கு தடை விதிக்க வேண்டும்.
கடைகளுக்கான துாரக் கட்டுப்பாடு குறித்து சட்டத்திருத்தம் செய்யாமல் மூட உத்தரவிட்டது ஏற்புடையதல்ல. கடை செயல்படாத காலத்திற்கான குத்தகை தொகையை எங்களுக்கு திரும்ப வழங்க தமிழக மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை செயலர், கமிஷனர், டாஸ்மாக் மேலாண்மை இயக்குனருக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டனர்.
நீதிபதி டி.பரதசக்கரவர்த்தி விசாரித்தார். மனு தாரர் தரப்பு வழக்கறிஞர் லட்சுமி சங்கர் ஆஜரானார்.
தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயணன்: கடைகளை மூடுவது அரசின் கொள்கை முடிவு சம்பந்தப்பட்டது. மது விற்பனை கடைகளை மூடினால் பார்களை எப்படி நடத்த முடியும்.
நீதிபதி: டாஸ்மாக் கடைகளை மூடும் தமிழக அரசின் உத்தரவில் எவ்வித தவறும் இல்லை. அரசின் உத்தரவு வரவேற்கத்தக்கது. இவ்வாறு விவாதம் நடந்தது.
நீதிபதி பிறப்பித்த உத்தரவு: மனுதாரர்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் மனு அளிக்க வேண்டும். தகுதி அடிப்படையில் பரிசீலித்து கடை செயல்படாத நாட்களுக்குரிய குத்தகை தொகையை திரும்ப வழங்குவது குறித்து உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்றார்.
மேலும்
-
ஆப்ரிக்காவில் 'எபோலா' வைரஸ் கர்நாடக சுகாதாரத்துறை 'அலெர்ட்'
-
சிவானந்த் நீலண்ணனவரின் ரூ.250 கோடி முடக்கம் குத்தாட்ட நடிகை சன்னி லியோனுக்கு ரூ.ஒரு கோடி கொடுத்தது அம்பலம்
-
நீட் தேர்வு வேண்டாம் முதல்வர் சித்து விருப்பம்
-
ஆபத்தான நிலையில் சுற்றுச்சுவர் புதுப்பிக்க எம்.எல்.ஏ., நடவடிக்கை
-
சக்ரேபைலு யானைகள் முகாமில் சுற்றுலா பயணியருக்கு தடை
-
சட்டவிரோத குவாரியில் பாறைகள் தகர்ப்பு போவி அபிவிருத்தி குழும தலைவர் கண்டனம்