கட்டுமான நிறுவன உரிமையாளருக்கு 'குண்டாஸ்' முன்னாள் போலீஸ் கமிஷனர் ஆஜராக உத்தரவு
சென்னை: கட்டுமான நிறுவன உரிமையாளர் மீதான குண்டர் சட்டத்தை எதிர்த்த ஆட்கொணர்வு மனு விசாரணைக்கு ஆஜராக, சென்னை போலீஸ் முன்னாள் கமிஷனர் அருண் ஆஜராக உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை கொளத்துார், ராமதாஸ் நகரில், தே.மு.தி.க., பொதுச்செயலர் பிரேமலதாவின் சகோதரர் எல்.கே.சுதீஷின் மனைவி பூர்ணஜோதிக்கு சொந்தமாக 2.10 ஏக்கர் நிலம் உள்ளது.
விற்பனை இங்கு, 234 அடுக்குமாடி குடியிருப்புகளை கட்டி, 78 குடியிருப்புகளை சுதீஷ் மற்றும் பூர்ணஜோதிக்கு ஒதுக்குவதாக, தனியார் கட்டுமான நிறுவன உரிமையாளர் சந்தோஷ் சர்மா ஒப்பந்தம் செய்தார்.
ஒப்பந்தத்தின் அடிப்படையில் சுதீஷ் மற்றும் அவரது மனைவிக்கு ஒதுக்கப்பட்ட 78 குடியிருப்புகளை போலி கையெழுத்திட்டு, 43 கோடி ரூபாய்க்கு விற்பனை செய்ததாக புகார் அளிக்கப் பட்டது. இந்த புகாரில் சந்தோஷ் சர்மா கைது செய்யப்பட்டு, ஜாமினில் வெளியே வந்தார்.
பின், குடியிருப்புகளை ஒப்படைக்காமல் ஏமாற்றி விட்டதாக, 2025ல் மீண்டும் கைது செய்யப்பட்டார். இதையடுத்து, அவரை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க, அப்போதைய சென்னை போலீஸ் கமிஷனர் அருண் உத்தரவு பிறப்பித்தார்.
இந்த உத்தரவை எதிர்த்து சந்தோஷ் சர்மாவின் மகள் வர்ஷா, சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்திருந்தார்.
அந்த மனுவில், '2019 - 2023ல் நடந்த சம்பவம் தொடர்பாக, 2025ல் இரண்டு ஆண்டுகள் தாமதமாக குண்டர் தடுப்பு சட்டத்தில் அடைக்கப்பட்டு உள்ளார்.
'ஒரே குற்ற சம்பவத்துக்கு கைதாகி, ஜாமினில் வெளியே வந்த நிலையில், அதே குற்றச்சாட்டுக்கு மேலும் இரு வழக்குகளை பதிவு செய்து, குண்டர் சட்டத்தில் அடைத்தது சட்டவிரோதம்' என தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், 'என் மகள் வர்ஷாவின் உடல்நிலை பாதிக்கப்பட்டு, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். மகளை கவனித்துக் கொள்ள சந்தோஷ் சர்மாவுக்கு நான்கு வார ஜாமின் வழங்க வேண்டும்' என, சந்தோஷ் சர்மாவின் மனைவி கல்பனா இடைக்கா ல மனு தாக்கல் செய்தார்.
அதிர்ச்சி இந்த மனு, நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன், வி.லட்சுமி நாராயணன் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, 'குண்டர் சட்டத்தில் அடைக்க உத்தரவு பிறப்பித்த அதிகாரி யார்?' என கேள்வி எழுப்பிய நீதிபதிகள், 'கொடூரமான இந்த உத்தரவு, நீதிமன்றத்துக்கு அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது' என்றனர்.
பின், குண்டர் சட்டத்தில் அடைக்க உத்தரவு பிறப்பித்த சென்னை போலீஸ் முன்னாள் கமிஷனர் அருண், அடுத்த வாரம் நேரில் ஆஜராக உத்தரவிட்டு, வழக்கின் விசாரணையை நீதிபதிகள் தள்ளிவைத்தனர்.
மேலும்
-
பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் கடலுார், விழுப்புரம் மாவட்டம்... பின் தங்கியது: ஆண்டுக்காண்டு தேர்ச்சி குறைவதால் பெற்றோர் அதிர்ச்சி
-
வலி நிவாரணி மாத்திரைவைத்திருந்தவர் கைது
-
திருட்டு போன 7 பைக் மீட்புபழங்குற்றவாளிக்கு காப்பு
-
பெற்றோருடன் சென்ற கணவரால் பாதிக்கப்பட்ட பெண் மனு
-
பெற்றோருடன் சென்ற கணவரால் பாதிக்கப்பட்ட பெண் மனு
-
4 நாட்கள் மழைக்கு வாய்ப்பு