திருட்டு போன 7 பைக் மீட்புபழங்குற்றவாளிக்கு காப்பு
ஈரோடு:ஈரோடு நகரின் பல்வேறு பகுதிகளில், கடந்த சில மாதங்களாக டூவீலர்களை மர்ம நபர்கள் திருடி செல்வது தெரியவந்தது. டூவீலர்கள் காணாமல் போன இடங்களில் உள்ள, சிசிடிவி கேமரா பதிவுகளை போலீசார் ஆராய்ந்தனர். அப்போது வாலிபர் ஒருவர் வந்து செல்வது தெரியவந்தது.
இது குறித்து ஈரோடு டவுன் போலீசார் விசாரித்து, மொடக்குறிச்சி காட்டுப்பாளையம் கண்ணன் மகன் மாதேஸ்வரன், 37, என்பவர் சிக்கினார். இவர் பழங்குற்றவாளி. இவர், ஈரோடு டவுன் சப்-டிவிசனில் உள்ள பல பகுதி
களில் கைவரிசையை காட்டி, டூவீலர்களை திருடியது தெரியவந்தது. இவரிடம் இருந்து, 7 பைக்குகளை போலீசார் மீட்டு கைது செய்தனர்.
திருடும் பைக்குகளை, பைனான்ஸ் நிறுவனத்தில் அடகு வைத்து பணம் பெற்று செல்வது வாடிக்கை என்பது உறுதியானது. அவரை சிறையில் அடைக்க, மருத்துவ பரிசோதனைக்கு அழைத்து சென்ற போது, இதய நோயாளி என்பது தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார்
ஜாமினில் விடுவித்தனர்.
மேலும்
-
மங்களம் மெட்ரிக் பள்ளி 10ம் வகுப்பு தேர்வில் 100 சதவீத தேர்ச்சி
-
சரஸ்வதி வித்யாலயா மெட்ரிக் பள்ளி 100 சதவீதம் தேர்ச்சி பெற்று சாதனை
-
எஸ்.டி., ஈடன் மெட்ரிக் பள்ளி 100 சதவீத தேர்ச்சி பெற்று அசத்தல்
-
12 ஆண்டுகளாக 100 சதவீதம் தேர்ச்சி அரசு பள்ளி தொடர் அசத்தல்
-
பெண்ணிடம் சீண்டிய டாக்டர் கைது
-
கிராவல் மண் லாரி கவிழ்ந்து விபத்து லாரி டிரைவர் படுகாயம்