4 நாட்கள் மழைக்கு வாய்ப்பு

நாமக்கல்:நாமக்கல் கால்நடை மருத்துவ கல்லுாரி மற்றும் வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கை: நாமக்கல் மாவட்டத்தில், இன்று முதல், 24 வரை, 4 நாட்கள், அதிகபட்ச பகல்நேர வெப்ப நிலை, 95 டிகிரி முதல், 98.6 டிகிரி பாரன்ஹீட் வரை இருக்கும். குறைந்தபட்ச இரவு நேர வெப்பநிலை, 75.2 டிகிரி பாரன்ஹீட் முதல், 77 டிகிரி பாரன்ஹீட் வரை இருக்கும். அடுத்த, 4 நாட்கள் மேக மூட்டத்துடன் காணப்படும்.


காற்றின் ஈரப்பதம், 40 முதல், 80 சதவீதம் வரை இருக்கும். காற்று மேற்கு திசையில் இருந்து மணிக்கு, 8 முதல், 12 கி.மீ., வேகத்தில் வீசக்கூடும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement