'டிஜிட்டல் அரெஸ்ட்' எனக்கூறி ரூ.1.70 கோடி மோசடி; மூவர் கைது
மதுரை: மதுரை, மகாத்மா காந்தி நகரை சேர்ந்தவர் சங்கரமூர்த்தி, 78. ஓய்வுபெற்ற தனியார் இன்சூரன்ஸ் நிறுவன உதவி மேலாளர்.
இவரது மொபைல்போனுக்கு ஏப்., 5ல் தொடர்பு கொண்டவர், தன்னை லக்னோ தீவிரவாத தடுப்புப்படை அதிகாரி என, அறிமுகப்படுத்தி கொண்டார்.
அதன்பின், 'உங்கள் டெபிட் கார்டு மூலம், 2.5 கோடி ரூபாய் மோசடி நடந்துள்ளது. 'உங்களை டிஜிட்டல் அரெஸ்ட் செய்கிறோம்' என்றார். இதில் பயந்துபோன சங்கரமூர்த்தியிடம், 'உங்கள் வங்கி பணத்தை எங்களு க்கு அனுப்புங்கள். ஆய்வுக்கு பின், மீண்டும் உங் கள் வங்கி கணக்கில், வரவு வைக்கப்படும்' என்றார். இதை நம்பி, 85 லட்சம் ரூபாயை சங்கரமூர்த்தி அனுப்பி, ஏமாந்தார்.
ஆசிரியையிடம் மோசடி மதுரை, கூடல்நகரை சேர்ந்தவர் நாகலட்சுமி, 63. ஓய்வுபெற்ற அரசுப்பள்ளி இசை ஆசிரியை. இவரது கணவர் வெங்கட்ராமனின் மொபைல்போனில் பிப்., 25ல் தொடர்பு கொண்ட ஒருவர், தன்னை சென்னை டி.ஜி.பி., அலுவலக இன்ஸ்பெக்டர் என அறிமுகப்படுத்தி, 'உங்கள் ஆதார் எண்ணை பயன்படுத்தி, தீவிரவாத செயல்களுக்கு பணபரிவர்த்தனை நடந்துள்ளது. உங்களை டிஜிட்டல் அரெஸ்ட் செய்துள்ளோம்' என்றார்.
பயந்த தம்பதி, ஆய்வுக்கு என, அவர் கூறிய வங்கி கணக்குகளுக்கு, 83.65 லட்சம் ரூபாயை அனுப்பி ஏமாந்தனர்.
இந்த இரு மோசடிகள் குறித்தும், மதுரை நகர் சைபர் கிரைம் போலீசார் விசாரித்து, வேலுார் மாவட்டம், வசந்தபுரம் அப்துல்பசூல் உர்ரகுமான், 33, கூட்டாளிகள் கருகம்பு த்துார் ஜாவித், 27, பாளையம் சகாபுதீன், 33, ஆகியோரை நேற்று கைது செய்தனர்.
மேலும்
-
வல்லக்கோட்டை முருகன் கோவிலில் கொடியேற்றத்துடன் விழா தொடக்கம்
-
ஆவின் பால் வினியோகஸ்தர்கள்... குமுறல் பெட்டிக்கு 4 பாக்கெட் கொள்ளை?
-
காங்கிரஸ் இருக்கும் இடத்தில் மதச்சார்பின்மை காக்கப்படுமா?: வைகோ சந்தேகம்
-
மூலக்காடு பழங்குடியினர் நலப்பள்ளி எஸ்.டி., பிரிவு பள்ளிகளிடையே முதலிடம்
-
பொறுப்பேற்பு
-
இன்று இனிதாக (22.05.2026) காஞ்சிபுரம்