பொறுப்பேற்பு
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் முதல் பெண் எஸ்.பி.,யாக ஷானாஸ் நேற்று பொறுப்பேற்றார்.
கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் துறையில் எஸ்.பி.,யாக பணிபுரிந்த அரவிந்த், காஞ்சிபுரம் மாவட்டத்திற்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். இவருக்கு பதிலாக, சென்னை சைபர் கிரைம் பிரிவில் எஸ்.பி.,யாக பணிபுரிந்த ஷானாஸ் கள்ளக்குறிச்சி மாவட்ட எஸ்.பி.,யாக நியமிக்கப்பட்டுள்ளார். இவர் நேற்று கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பு அலுலகத்தில் மாவட்டத்தின் 10வது எஸ்.பி.,யாக, பொறுப்பேற்றக் கொண்டார். இவர் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் முதல் பெண் எஸ்.பி., என்பது குறிப்பிடத்தக்கது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement