மூலக்காடு பழங்குடியினர் நலப்பள்ளி எஸ்.டி., பிரிவு பள்ளிகளிடையே முதலிடம்
மூங்கில்துறைப்பட்டு: மூங்கில்துறைப்பட்டு அருகே உள்ள மூலக்காடு பழங்குடியினர் நல உயர்நிலைப்பள்ளி மாவட்ட அளவில் முதலிடம் பெற்று சாதனைப்படுத்துள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பழங்குடியினர் நலத்துறையின் கீழ் செயல்பட்டு வரும் 6 மேல்நிலைப் பள்ளிகள், 2 உயர்நிலைப் பள்ளிகள் மற்றும் 1 ஏகாலயா மாதிரி மேல்நிலைப் பள்ளிகளில் இருந்து கடந்த மார்ச் 2025--2026 ல் நடைபெற்ற பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் மொத்தம் 406 மாணவர்கள் தேர்வு எழுதியதில் 379 மாணவர்கள் தேர்ச்சி அடைந்து, 94 சதவீத தேர்ச்சி பெற்றுள்ளனர்.
கடந்த கல்வியாண்டின் தேர்ச்சி 85 சதவீத ஆகும். மேலும் இந்த கல்வியாண்டில் கோமுகி அணை பழங்குடியினர் மேல்நிலைப்பள்ளி, பாச்சேரி பழங்குடியினர் மேல்நிலைப்பள்ளி மற்றும் மூலக்காடு பழங்குடியினர் நல உயர்நிலைப்பள்ளி ஆகிய மூன்று பள்ளிகளும் 100 சதவீதம் தேர்ச்சி பெற்று மிகப் பெரும் சாதனை படைத்துள்ளது.
இதில் அதிகபட்சமாக மூலக்காடு உயர்நிலைப்பள்ளி மாணவி ப்ரீத்தம் 473 மதிப்பெண்கள் பெற்று முதலிடமும், மகேஸ்வரி என்பவர் 443 மதிப்பெண்கள் பெற்று இரண்டாம் இடமும், இன்னாடு பழங்குடியினர் நல மேல்நிலைப்பள்ளி மாணவி ஹன்னா கிளாடிஸ் 435 மதிப்பெண்கள் பெற்று மூன்றாம் இடமும் பெற்று சாதனை படைத்துள்ளனர்.
மேலும் வெள்ளி மலை ஏகாலயா மாதிரி பள்ளி 90சதவீதம்,கிளாக்காடு பழங்குடியினர் நல மேல்நிலைப்பள்ளி 97 சதவீதம், மணியார் பாளையம் நல மேல்நிலைப்பள்ளி 94 சதவீதம்,கொட்ட புத்துார் பழங்குடியினர் நல மேல்நிலைப்பள்ளி 94 சதவீதம், இன்னாடு நல மேல்நிலைப்பள்ளி 83 சதவீதம் மற்றும் பரங்கிநத்தம் நல உயர்நிலைப்பள்ளி 96 சதவீதம் தேர்ச்சி பெற்று மிகப்பெரிய சாதனை பெற்றுள்ளது.
மேலும் இந்த கல்வியாண்டில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்ற தலைமை ஆசிரியர்கள், மாணவர்களை கள்ளக்குறிச்சி மாவட்ட பழங்குடியினர் நலத்திட்ட அலுவலர் அம்பேத்கார் பாராட்டி வாழ்த்து தெரிவித்தார்.
மேலும்
-
குற்றவழக்குகள் துறையில் 'சிபாரிசு நியமனம்' நடைமுறைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படுமா?
-
காங்., எம்.எல்.ஏ., விஸ்வநாதனுக்கு அமைச்சர் பதவி கிடைத்தது எப்படி?
-
'அவருக்கு பதில் இவர்' : எம்.எல்.ஏ.,வால் சர்ச்சை
-
கன்னியாகுமரி நகரில் அங்கீகாரமற்ற கட்டடங்கள் : உயர்நீதிமன்றம் உத்தரவு
-
கோயில் சொத்துக்களை பாதுகாக்க நடவடிக்கை: உயர்நீதிமன்றம் உத்தரவு
-
மா.செ., கூட்டத்தை மீண்டும் கூட்டும் பழனிசாமி; பங்கேற்காவிட்டால் பதவியை பறிக்கவும் திட்டம்