காங்கிரஸ் இருக்கும் இடத்தில் மதச்சார்பின்மை காக்கப்படுமா?: வைகோ சந்தேகம்

21

சென்னை: ''காங்கிரஸ் இருக்கும் இடத்தில் மதச்சார்பின்மை பாதுகாக்கப்படும் என்று சொல்ல முடியாது,'' என, ம.தி.மு.க., பொதுச்செயலர் வைகோ கூறினார்.

அவர் அளித்த பேட்டி: தமிழகத்தில், மும்மொழிக் கொள்கையை எக்காரணம் கொண்டும், த.வெ.க., அரசு ஏற்றுக் கொள்ளக் கூடாது. லோக்பவன் நிகழ்ச்சியில், 'வந்தே மாதரம்' பாடலை, கவர்னர் திணிக்கிறார். தமிழக அரசு ஏற்பாடு செய்யும் நிகழ்ச்சியில், வந்தே மாதரத்திற்கு இடம் கொடுக்காமல், தமிழ்த்தாய் வாழ்த்து முதலிலும், பின், தேசிய கீதமும் பாடப்பட வேண்டும்.

த.வெ.க., ஆட்சிக்கு ஆறு மாதம் அவகாசம் கொடுப்போம். அவர்கள் அனுபவம் இல்லாதவர்கள்; போகப்போக படிப்பினைகளை கற்றுக் கொள்வர். கூட்டணியில் இருந்து, காங்கிரஸ் பிரிந்து சென்றதால், தி.மு.க.,வுக்கு எந்த பின்னடைவும் கிடையாது. காங்கிரஸ் இருக்கும் இடத்தில்தான் மதச்சார்பின்மை பாதுகாக்கப்படும் என சொல்ல முடியாது.

'இன்ஸ்டாகிராம்' வாயிலாக த.வெ.க., ஆட்சியை பிடித்து விட்டதாக, முன்னாள் முதல்வர் ஸ்டாலின் கூறுவது, அவர் மனதில் இருந்து சொல்லும் கருத்து. அந்த கருத்துக்கு நான் பதிலளிக்க விரும்பவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement