மருந்து கடைகள்  வேலை நிறுத்தம்

சிவகங்கை: இணையவழி மருந்து விற்பனைக்கு தடை விதிக்கக் கோரி மருந்து வணிகர்கள், மருந்தாளுநர்கள் மருந்து கடைகளை அடைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மருந்தகங்கள் வைத்திருப்போரின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாக்கியுள்ள மின் மருந்தகச் செயல்பாடுகள் தொடர்பான அரசாணைகளை மத்திய அரசு உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும். இணையவழியாக மருந்து விற்பனைக்கு தடை விதிக்க வலியுறுத்தி சிவகங்கை மாவட்டத்தில் 950 மருத்துக்கடைகளும் சிவகங்கை வட்டாரத்தில் உள்ள 137 மருந்துகடைகளும் நேற்று அடைக்கப்பட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Advertisement