கரூர் மாரியம்மன் திருவிழாசிம்ம வாகனத்தில் வீதி உலா

கரூர்:கரூரில், பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவில் வைகாசி திருவிழா நடந்து வருகிறது. கடந்த, 10ல் கம்பம் நடுதலுடன் விழா தொடங்கியது. 15ல் பூச்சொரிதல் ஊர்வலம் நடந்தது.

அதை தொடர்ந்து, நாள்தோறும் பல்வேறு விசேஷ வாகனங்களில், உற்சவர் அம்மன் திருவீதி உலா நடந்து வருகிறது. நேற்று மாலை, வெள்ளி சிம்ம வாகனத்தில் உற்சவர் அம்மன் திருவீதி உலா நடந்தது. ஏராளமான பக்தர்கள் சுவாமியை வழிபட்டனர்.

காளியம்மன் கோவில் திருவிழாநேர்த்திக்கடன் செலுத்தி வழிபாடு குளித்தலை : குளித்தலை அடுத்த நாகனுார் மஹாகாளியம்மன், பகவதி அம்மன், கருப்பசாமி ஆகிய கோவில்களின் திருவிழா, மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்துவது வழக்கம். இந்த ஆண்டுக்கான திருவிழா, கடந்த வாரம் காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. அன்றுமுதல் 8 நாள் மஹாகாளியம்மன், பகவதிஅம்மன், கருப்பசாமிக்கு சிறப்பு பூஜை செய்து வழிபட்டு வந்தனர்.
தொடர்ந்து தாரை தப்பட்டைமுழங்க வாண வேடிக்கைகளுடன் சுவாமிகள் வீதி உலா வந்து கோவிலில் குடி புகுந்தது. பின்னர் பக்தர்கள் மாவிளக்கு எடுத்தல், பொங்கல் வைத்தல், கிடா வெட்டுதல், அலகு குத்துதல் ஆகிய நேர்த்திக்கடன்களை செய்தனர்.

Advertisement