வாலாஜாபாத் ஒன்றிய கவுன்சிலர் கூட்டம்
வாலாஜாபாத்: வாலாஜாபாத் ஒன்றிய கவுன்சிலர்களுக்கான மாதாந்திர கூட்டம், வாலாஜாபாத் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் நேற்று நடந்தது.
வாலாஜாபாத் ஒன்றிய குழு தலைவர் தேவேந்திரன் தலைமையில் நடந்த இக்கூட்டத்தில், ஒன்றியத்திற்கு உட்பட்ட வார்டு கவுன்சிலர்கள் பங்கேற்றனர். கூட்டத்தில் வரவு - செலவு கணக்கு வாசிக்கப்பட்டு ஒப்புதல் பெறப்பட்டது.
குடிநீர் தட்டுப்பாடு நிலவும் இடங்களில் முறையாக தீர்வு காண கவுன்சிலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.
மேலு ம், பொது நிதியின் கீழ் மேற்கொள்ளப்படும் பணிகள் மற்றும் தேர்தல் காரணமாக தொடங்காத ஊராட்சி பணிகள் குறித்து ஒன்றிய கவுன்சிலர்கள் கவனம் கொண்டு பணிகளை ஆராய்ந்து விரைந்து முடிக்க கேட்டு கொள்ளப்பட்டது.
வாலாஜாபாத் ஒன்றிய வார்டுகளில் சாலை, மழைநீர் வடிகால்வாய் வசதி போன்றவை ஏற்படுத்துதல் குறித்து கவுன்சிலர்கள் கோரினர்.
அக்கோரிக்கைகளை மனுவாக பெற்றுக் கொண்ட ஒன்றிய குழு தலைவர் தேவேந்திரன் வளர்ச்சி பணிகள் மேற்கொள்வது குறித்து முறையாக நடவடிக்கை எடுக்கப்படும் என கூறினார்.