12 ஆண்டுகளாக 100 சதவீதம் தேர்ச்சி அரசு பள்ளி தொடர் அசத்தல்

நடுவீரப்பட்டு: நடுவீரப்பட்டு அடுத்த கீ ழ்மாம்பட்டு அரசு உயர்நிலைப்பள்ளி, 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளது.

இந்த பள்ளியில், நடப்பாண்டு, 10ம் வகுப்பு அரசு பொதுத்தேர்வை, 38 மாணவர்கள் எழுதினர். இந்த மாணவர்கள், அனைவரும் தேர்ச்சி பெற்றனர்.

இந்த பள்ளி, கடந்த 2014 ம் ஆண்டு பொதுத்தேர்விலிருந்து 2026 ம் ஆண்டு பொது தேர்வு வரை தொடர்ந்து, 12 ஆண்டுகளாக 100 சதவீதம் தேர்ச்சி பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

இப்பள்ளி மாணவர் கலைக்கண்டன் 482; மாணவி தர்ஷினி 470; மாணவர் திவாகர் 468; மதிப்பெண்கள் பெற்றனர்.

தேர்ச்சி பெற்ற மாணவர்களை பள்ளி தலைமை ஆசிரியர் சக்கரவர்த்தி மற்றும் ஆசிரி யர்கள் பாராட்டினர்.

Advertisement